தமிழ்நாடு

கணிதத்தில் 100/100: மாற்றுத்திறனாளி மாணவர்கள் சாதனை

webteam

கோவையில் கணிதப் பாடத்தில் காது கேட்காத மற்றும் வாய் பேச முடியாத மாணவர்கள் நூற்றுக்கு நூறு மதிப்பெண் பெற்று சாதனை படைத்துள்ளனர். 

கோவையை அடுத்த ஆர்.எஸ்.புரம் பகுதியில் உள்ள மாநகராட்சி காது கேளாதோர் மற்றும் வாய் பேச முடியாதோர் பள்ளியில் பத்தாம் வகுப்பு தேர்வு எழுதிய ஏழு பேர் தேர்ச்சி அடைந்து உள்ளனர். தேர்ச்சி என்பது இவர்களுக்கு எளிதான காரியமாக இல்லாத போதிலும், கடினமான கணித பாடத்தில் அனைத்து மாணவர்களும் நூற்றுக்கு நூறு மதிப்பெண்கள் எடுத்து சாதித்து உள்ளனர்.

மற்ற பாடங்களை காட்டிலும் கணித பாடத்தை இந்த மாணவர்கள் புரிந்துக் கொள்ள பல கஷ்டங்களை சந்தித்து வந்தாலும், கடின உழைப்பாலும் ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்களின் ஆதரவாலும் இந்த மதிப்பெண்ணை எடுத்து சாதித்துள்ளனர். எந்தப் பள்ளியில் சேர்ப்பது? எப்படி படிக்கவைப்பது என பல சிரமங்களுக்கு மத்தியில், மாநகராட்சி பள்ளியில் படித்து மகளை தேர்ச்சி பெற வைத்துள்ளனர் அவர்களின் பெற்றோர்கள். தற்போது இந்த மணாவர்கள் பத்தாம் வகுப்பு தேர்வில் வெற்றி பெற்று இருந்தாலும், மேல் படிப்பிற்காக அரசு உதவி செய்ய வேண்டும் என்ற கோரிக்கையையும் பெற்றோர்கள் முன் வைத்துள்ளனர்.