அமலாக்கத்துறை சோதனை pt desk
தமிழ்நாடு

கோவை | தொழிலதிபர் லாட்டரி மார்ட்டின் தொடர்புடைய இடங்களில் 2 வது நாளாக தொடரும் அமலாக்கத்துறை சோதனை!

கோவையில் பிரபல தொழிலதிபர் லாட்டரி மார்ட்டின் வீடு, அலுவலகம் மற்றும் ஹோமியோபதி மருத்துவக் கல்லூரி ஆகிய இடங்களில் 2 ஆவது நாளாக அமலாக்கத் துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

PT WEB

செய்தியாளர்: பிரவீண்

சென்னை மற்றும் கோவையில் லாட்டரி அதிபர் மார்ட்டினுக்குச் சொந்தமான இடங்கள் மற்றும் அவர் தொடர்புடைய இடங்களில் கமலக்கத்துறை அதிகாரிகள் நேற்று காலை முதல் சோதனை நடத்தி வருகின்றனர்.

கோவை துடியலூர் வெள்ளக்கிணறு பகுதியில் உள்ள தொழிலதிபர் மார்டின் இல்லம், மார்டின் குழும அலுவலகம் மற்றும் மார்ட்டின் ஹோமியோபதி மருத்துவக் கல்லூரி ஆகிய இடங்களில் நேற்று காலை முதல் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

அமலாக்கத்துறை சோதனை

இந்த சோதனை இரண்டாவது நாளாக இன்றும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. கடந்த ஆண்டு அமலாக்கத்துறை செய்த சோதனையை அடுத்து மார்ட்டின் குழும நிறுவனங்களில் நடத்திய சோதனையில் 400 கோடி ரூபாய் வரையிலான சொத்துகள் முடக்கப்பட்டு இருந்தன.

அப்பொழுது கைப்பற்றப்பட்டிருந்த ஆவணங்களின் அடிப்படையில் தற்போது மீண்டும் அமலாக்கத் துறையினர் மார்ட்டின் தொடர்புடைய இடங்களில் சோதனையில் ஈடுபட்டு வருவதாகவும், இந்த சோதனை இன்று நிறைவடையும் எனவும் கூறப்படுகின்றது.