தமிழ்நாடு

கோவை சிறுமி வன்கொடுமை, கொலை வழக்கு - சந்தோஷ் குற்றவாளி என தீர்ப்பு

கோவை சிறுமி வன்கொடுமை, கொலை வழக்கு - சந்தோஷ் குற்றவாளி என தீர்ப்பு

webteam

கோவையில் 7 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்ட வழக்கில் சந்தோஷ் குற்றவாளி என நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

2019ஆம் ஆண்டு மார்ச் 26ஆம் தேதி கோவையில், வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்தபோது காணாமல்போன 7வயது சிறுமி, கழுத்து நெரிக்கப்பட்ட நிலையில் சடலமாக கண்டெடுக்கப்பட்டார். கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் இருந்த சிறுமி, பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டிருந்தது தெரியவந்தது. மாநிலம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய இச்சம்பவத்தில் விசாரணை நடத்திய காவல்துறையினர், சந்தோஷ்குமார் என்பவரை கைது செய்தனர்.

கோவை போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அதன்படி குற்றம்சாட்டப்பட்டிருந்த சந்தோஷ் தான் குற்றாவளி என நீதிமன்றம் தீர்ப்பளித்திருக்கிறது. தீர்ப்பின் விவரங்கள் பிற்பகல் மூன்று மணிக்கு அறிவிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே, சிறுமியின் பிரேத பரிசோதனை அறிக்கையில் சந்தோஷை தவிர்த்து மற்றொரு நபரின் டி.என்.ஏவும் கலந்து இருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது. இதுகுறித்து அரசு தரப்போ, காவல்துறையின் புலன் விசாரணை அதிகாரியோ நடவடிக்கை எடுக்கவில்லை என சிறுமியின் தாய் தரப்பு வழக்கறிஞர் கூறியுள்ளார்.