தமிழ்நாடு

குற்றால அருவிகளில் டிச.20 முதல் குளிக்க அனுமதி

குற்றால அருவிகளில் டிச.20 முதல் குளிக்க அனுமதி

webteam

குற்றால அருவிகளில் வரும் 20-ஆம் தேதி முதல் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

கொரோனா பெருந்தொற்றால் குற்றால அருவிகளில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டது. பொதுமுடக்கம் தளர்த்தப்பட்டு, சுற்றுலா தலங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டபோதும் கூட, குற்றால அருவிகளில் குளிக்க தடை நீடித்தது. இந்தசூழலில், வரும் 20-ஆம் தேதியிலிருந்து அருவியில் மக்கள் குளிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்படுவர். அருவிகளின் பராமரிப்பு, நிலையான இயக்க நடைமுறைகள் பின்பற்றுவதை உறுதி செய்து அறிக்கை அனுப்புவதற்கு மாவட்ட அளவிலான கண்காணிப்பு அலுவலர்கள் மற்றும் இதர குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. குற்றாலம் பிரதான அருவி, ஐந்தருவி, சுற்றுச்சூழல் பூங்கா, பழைய குற்றால அருவி, மேக்கரை அருவி, கண்ணுபுளி மேட்டு அருவி ஆகிய பகுதிகளுக்கு தனித்தனியாக குழுக்களை அமைத்து, அரசு விதிமுறைகளை அறிவித்துள்ளது.

இரண்டு மீட்டர் இடைவெளியை பின்பற்ற வேண்டும், கூட்ட நெரிசலை கட்டுப்படுத்த ஒரே நேரத்தில் 10 ஆண்கள், 10 பெண்களுக்கு மட்டுமே அனுமதி என பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. சுற்றுலா பயணிகள் தங்கும் விதிகளில், அரசின் விதிமுறைகள் பின்பற்றப்படுகிறதா என்பதை தென்காசி கோட்டாட்சியர் உறுதிப்படுத்த வேண்டும் என்றும் அரசு அறிவுறுத்தியுள்ளது.