தமிழ்நாடு

9 மாதங்களுக்கு பின் குற்றால அருவி டிச. 15இல் திறப்பு - அதிகாரிகள் ஆய்வு

webteam

குற்றால அருவியில் நாளை பொதுமக்கள் அனுமதிக்கப்பட உள்ள நிலையில், அங்கு அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.

தென்காசி மாவட்டத்தில் உள்ள குற்றாலா அருவியானது மிக பிரபலம் வாய்ந்த சுற்றுலா தளமாகும். கொரோனா பரவல் காரணமாக கடந்த 9 மாதங்களாக அங்கு பொதுமக்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. இதனால், அங்கு கடை நடத்து வந்த ஊழியர்களும் தங்களது வாழ்வாதாரத்தை இழந்து தவித்தனர்.

தமிழகத்தில் கொரோனா பரவல் படிப்படியாக குறைந்து வரும் நிலையில், சூழ்நிலைகளுக்கு ஏற்ப அரசானது தளர்வுகளை அறிவித்து வருகிறது. இந்நிலையில், தென்காசி மாவட்ட ஆட்சியர் சமீரன் நாளை (15.12.20) முதல் குற்றலா அருவியானது நிபந்தனைகளுடன் மக்கள் பயன்பாட்டிற்கு வர இருப்பதாக கூறியுள்ளார். அந்த வகையில் காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை குற்றால அருவியானது செயல்பாட்டில் இருக்கும். 

குற்றாலத்தில் மொத்தம் ஐந்தருவிகள் உள்ள நிலையில், ஒவ்வொரு அருவிக்கும் தனிதனியாக குழு அமைக்கப்பட்டு ஒரு நேரத்தில் எத்தனை பேர் குளிக்கவேண்டும் என்பது முடிவு செய்யப்படும். அருவியில் குளிக்க வரும் மக்கள் தனிமனித இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும். முக கவசம் அணிவது கட்டாயமாக்கபட்டுள்ளது. இந்நிலையில் அங்கு அதிகாரிகள் ஆய்வுப் பணிகளை மேற்கொண்டனர்.