தமிழ்நாடு

அரசு வேலை வழங்க தமிழக அரசு விதிகளை வகுக்கலாம் - உயர் நீதிமன்றம் யோசனை

அரசு வேலை வழங்க தமிழக அரசு விதிகளை வகுக்கலாம் - உயர் நீதிமன்றம் யோசனை

Sinekadhara

கொரோனா தடுப்புப்பணியின்போது இறக்கும் சுகாதாரப் பணியாளரின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசுப்பணி வழங்க தமிழக அரசே விதிகள் வகுக்கலாம் என உயர் நீதிமன்றம் கூறியுள்ளது.

மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் தூய்மை பணியாளர்களுக்கு வழங்கும் இழப்பீட்டை நிறுத்திவிடக்கூடாது என தொடுக்கப்பட்டிருந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அதற்கு தமிழக அரசு தரப்பில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும், இறந்தவர்களின் குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டது.

அதற்கு பதிலளித்த நீதிபதிகள், இழப்பீடு வழங்குவதோடு நிறுத்திவிடாமல், கொரோனா தடுப்புப்பணியின்போது இறக்கும் சுகாதாரப்பணியாளரின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசுப்பணி வழங்க தமிழக பரிசீலக்க வேண்டும் என்று அறிவுறுத்தியது. மேலும் கருணை அடிப்படையில் வேலை வழங்குவது அரசின் கொள்கை முடிவு என்றாலும் இந்த விவகாரத்தில் தமிழக அரசே விதிகளை வகுக்கலாம் என்றும் கூறியுள்ளது.