செந்தில் பாலாஜி  PT WEP
தமிழ்நாடு

செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் 49வது முறையாக நீட்டிப்பு

webteam

செய்தியாளர்: V.M.சுப்பையா

சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச்சட்ட வழக்கில் கடந்த ஆண்டு ஜூன் 14ம் தேதி முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டார். அவரது ஜாமீன் மனுக்களை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றமும், சென்னை உயர்நீதிமன்றமும் தள்ளுபடி செய்துள்ளன. தற்போது ஜாமீன் கோரி செந்தில் பாலாஜி தாக்கல் செய்த மனு வருகிற 24ஆம் தேதி (நாளை) உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வர உள்ளது.

senthil balaji, ed, madras high court

முன்னதாக நெஞ்சு வலி காரணமாக ஓமந்தூரார் மருத்துவமனையில் அனுமதிக்கபட்டுள்ள செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் நேற்றுடன் முடிவடைவடைந்தது.

இதையடுத்து ஓமந்தூரார் மருத்துவமனையில் இருந்து காணொலி காட்சி மூலம் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி முன்பாக நேற்று ஆஜர்படுத்தப்பட்டார் செந்தில் பாலாஜி. அப்போது அவரது நீதிமன்ற காவலை ஜூலை 29ம் தேதி வரை நீட்டித்து நீதிபதி உத்தரவிட்டார். இதன் மூலம் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் 49வது முறையாக நீட்டிக்கப்பட்டுள்ளது.