தமிழ்நாடு

தப்பிக்கமுயன்ற ரவுடியிடமிருந்த நாட்டு வெடிகுண்டுகள்! அடுத்து என்ன செய்யப்பட்டது தெரியுமா?

தப்பிக்கமுயன்ற ரவுடியிடமிருந்த நாட்டு வெடிகுண்டுகள்! அடுத்து என்ன செய்யப்பட்டது தெரியுமா?

webteam

காஞ்சிபுரம் அருகே ரவுடி சச்சின் என்பவரிடம் இருந்து கைப்பற்றப்பட்ட நாட்டு வெடிகுண்டுகள்யாவும், நீதிமன்ற வழிகாட்டுதலின் படி பாதுகாப்பாக அழிக்கப்பட்டது.

காஞ்சிபுரம் மாவட்டம், சோமங்கலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட நடுவீரப்பட்டு பகுதியில் கடந்த செப்டம்பர் மாதம் 28 ஆம் தேதி ரவுடி சச்சின் என்பவரை காவல்துறையினர் பிடிக்க முயன்றனர். அப்போது அவர் போலீசார் மீது நாட்டு வெடிகுண்டை வீசி, அவர்களை கொல்ல முயன்று அரிவாளால் வெட்டினார் என சொல்லப்படுகிறது.

இதையடுத்து போலீசாரை வெட்டிய ரவுடி சச்சினை, சோமங்கலம் ஆய்வாளர் சிவகுமார் துப்பாக்கியால் தொடையில் சுட்டுப் பிடித்தார். இதைத் தொடர்ந்து அவருக்கு மருத்துவமனை சிகிச்சை அளிக்கப்பட்டது. அப்போது கைப்பற்றை இரண்டு நாட்டு வெடிகுண்டுகளை பாதுகாப்பாக வைத்திருந்தது காவல்துறை. இதில் காயமடைந்த காவலர்களும், குரோம்பேட்டை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

இந்நிலையில், நீதிமன்ற வழிகாட்டுதலின் படி சோமங்கலம் மாங்கான்யம் மலையடிவாரம் அருகில் மருதம் வெடிகுண்டு நிபுணர் குழு பாதுகாப்பில், தாம்பரம் தீயணைப்புத் துறை, ஆம்புலன்ஸ், ஊர் தலைவர், சோமங்கலம் ஆய்வாளர் சிவகுமார் முன்னிலையில் 4 அடி ஆழம் பள்ளம் தோண்டி, இரண்டு நாட்டு வெடிகுண்டுகளை அதில் புதைத்து வெடிக்க செய்து அழித்தனர்.