தமிழ்நாடு

கொரோனா எதிரொலி : தமிழகத்தில் எல்.கே.ஜி., யு.கே.ஜி வகுப்புகளுக்கு விடுமுறை

கொரோனா எதிரொலி : தமிழகத்தில் எல்.கே.ஜி., யு.கே.ஜி வகுப்புகளுக்கு விடுமுறை

webteam

கொரோனா வைரஸ் எதிரொலியால் தமிழகம் முழுவதும் எல்.கே.ஜி மற்றும் யு.கே.ஜி வகுப்புகளுக்கு மார்ச் 31ஆம் தேதி வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் இந்தியாவிலும் பரவியுள்ள நிலையில், அனைத்து மாநிலங்களில் தீவிர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தமிழகத்திலும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன. இந்நிலையில் தமிழகத்தில் அனைத்து பள்ளிகளின் எல்.கே.ஜி மற்றும் யு.கே.ஜி வகுப்புகளுக்கு மார்ச் 31ஆம் தேதி வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் கேரளாவை ஒட்டியுள்ள கன்னியாகுமரி, தேனி, நெல்லை, தென்காசி, கோவை, திருப்பூர் மற்றும் நீலகிரி ஆகிய மாவட்டங்களில் 5ஆம் வகுப்பு வரை பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, கேரளா, டெல்லி, சத்தீஸ்கர் மற்றும் மத்தியப் பிரதேசம் ஆகிய மாநிலங்களிலும் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், திரையரங்குகள் மற்றும் மால்களையும் மூட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும் ஆந்திரா, கேரளா மற்றும் தமிழ்நாடு ஆகிய மாநிலங்களில் உள்ள பிரபல கோயில்களுக்கு நோய் அறிகுறி இருக்கும் பக்தர்கள் கோயிலுக்கு வரவேண்டாம் என்றும் அறிவிப்பு வெளியாகியுள்ளது.