தமிழ்நாடு

சென்னை புழல் சிறைச்சாலையிலுள்ள 30 கைதிகளுக்கு கொரோனா உறுதி 

சென்னை புழல் சிறைச்சாலையிலுள்ள 30 கைதிகளுக்கு கொரோனா உறுதி 

webteam
சென்னை புழல் சிறையில் உள்ள 30  கைதிகளுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
 
தமிழகத்தில் நாளுக்குநாள் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதுதொடர்பான தகவல்களை சுகாதாரத்துறை தினந்தோறும் வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் தமிழகத்தில் இன்று மட்டும் 874  பேருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 20,246 ஆக அதிகரித்துள்ளது.  
 
 
அதேசமயம் தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 765 பேர் கொரோனாவிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் குணமடைந்தோர் எண்ணிக்கை 11,313 உயர்ந்துள்ளது. மேலும் கொரோனாவால் இன்றும் ஒரே நாளில் மட்டும் 9 பேர் உயிரிழந்த நிலையில் இதுவரை மொத்தம் 154 பேர் உயிரிழந்திருக்கின்றனர். இந்தத் தொலையில் சென்னையில் மட்டும் இறந்தவர்களின் எண்ணிக்கை 113 ஆக உள்ளது.  மேலும் இதுவரை குணமடைந்துள்ளவர்களின் 11,313 பேர் என்றும் தெரியவந்துள்ளது. இதில் குணமடைந்தவர்களின் அளவு 55.87 சதவீதமாக உள்ளது.  
 
சென்னையில் மட்டும் இன்று 618 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் சென்னையில் கொரோனா பாதிப்பின் எண்ணிக்கை 13,362 ஆக உயர்ந்துள்ளது.   
 
 
இந்நிலையில் சென்னை புழல் சிறையிலுள்ள 94 கைதிகளைப் பரிசோதனை செய்ததில் மொத்தம் 30 கைதிகளுக்கு கொரோனா நோய் இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் அமைச்சுப் பணியாளர் ஒருவர் நெஞ்சு வலிக் காரணமாக உயிரிழந்த நிலையில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளது.  மொத்தம் 19 சிறைக்காவலர்களும் இந்தக் கொரோனா சோதனை நடத்தப்பட்டது. அதற்கான முடிவுகள் இன்று கிடைத்துள்ளது.  இதில் ஏழு பேருக்கு ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மீதம் உள்ள 23 பேர் சிறை வளாகத்திலேயே உள்ள மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படு வருகிறது.  
 
கடலூரிலிருந்து பயிற்சிக்காக வந்த ஐந்து கைதிகளிடமிருந்து கொரோனா தொற்று ஏற்பட்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இந்தத் தண்டனைக் கைதிகளுக்கு நேற்று முன்தினம் பரிசோதனை எடுக்கப்பட்டதாகவும் சுகாதாரத்துறையும் சிறை நிர்வாகமும் வெளியிட்டுள்ள தகவலில் கூறப்பட்டுள்ளது.