தமிழ்நாடு

கொரோனா கால மகத்துவர்: நகையை அடகு வைத்து ஏழைகளுக்கு உணவளிக்கும் ஆட்டோ ஓட்டுனர்

கொரோனா கால மகத்துவர்: நகையை அடகு வைத்து ஏழைகளுக்கு உணவளிக்கும் ஆட்டோ ஓட்டுனர்

kaleelrahman

ராமநாதபுரத்தில் தங்க நகைகளை அடகு வைத்து, ஏழை எளிய மக்களுக்கு உணவு வழங்கும் சேவையில் ஈடுபட்டு வரும் ஆட்டோ ஓட்டுனருக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.

கொரோனா நோய் தொற்று பரவலை தடுக்க தமிழக அரசு தளர்வுகள் அற்ற முழு ஊரடங்கை அமல்படுத்தியுள்ளது. இதனால், ராமநாதபுரம் மாவட்டத்தில் உணவின்றி சுற்றித்திரிபவர்கள், மனநலம் குன்றியவர்கள், அரசு மருத்துவமனையில் உணவு கிடைக்காமல் கஷ்டப்படும் நோயாளிகளின் உறவினர்கள் அகியோருக்கு அடிப்படை தேவையான உணவு கிடைக்கும் வகையில் சொந்த செலவில் தினந்தோறும் 50-க்கும் மேற்பட்டவர்களுக்கு உணவு வழங்கி வருகிறார், ராமநாதபுரத்தை சேர்ந்த சமூக ஆர்வலரும் ஆட்டோ ஓட்டுனருமான சாகுல்ஹமீது.

ஆட்டோ ஓட்டுவதன் மூலம் கிடைக்கும் வருமானத்தில் சேர்த்து வைத்த பணம் மற்றும் தங்க நகைகளை விற்று அந்த பணத்தைக் கொண்டு நாள்தோறும் 50-க்கும் மேற்பட்டவர்களுக்கு  உணவு வழங்கி வருகிறார்.

தனது தங்க நகையை விற்று அதன் முலம் எழை மக்களுக்கு நாள்தோறும் உணவு வழங்கும் ஆட்டோ ஓட்டுனர் சேவை ராமநாதபுரம் மாவட்ட மக்களிடம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.