தமிழ்நாடு

கொரோனா கால மகத்துவர்: தினமும் 500 நபர்களுக்கு அரிசி கஞ்சி வழங்கும் பெண் காவல் ஆய்வாளர்

கொரோனா கால மகத்துவர்: தினமும் 500 நபர்களுக்கு அரிசி கஞ்சி வழங்கும் பெண் காவல் ஆய்வாளர்

kaleelrahman

கொரோனா காலத்தில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் விதமாக பெண் காவல் ஆய்வாளர் ஒருவர், அரசு மருத்துவமனைகளின் முன்பு காலை உணவாக 500 நபர்களுக்கு அரிசி கஞ்சி வழங்கி வருகிறார். அவருக்கு பாராட்டுகள் குவிநது வருகின்றன.

கொரோனா தொற்று காரணமாக அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கால் வாழ்வாதரத்தை இழந்தவர்களுக்கு பலரும் உதவிகள் செய்து வருகின்றனர். அந்த வகையில் பெண் காவல் ஆய்வாளர் ஒருவர், அரசு மருத்துவமனைகள் முன்பு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க காலை உணவாக அரிசி கஞ்சியை வழங்கி வருகிறார்.

சென்னையில் சிலை கடத்தல் தடுப்பு பிரிவில் ஆய்வாளராக இருப்பவர் காஞ்சனா. இவர், ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனை, அரசு ஸ்டான்லி மருத்துவமனை உள்ளிட்ட அரசு மருத்துவமனைகளின் முன்பு நாள்தோறும் 500 நபர்களுக்கு அரிசி கஞ்சி வழங்கி வருகிறார். காலையில் பணிக்கு செல்வதற்கு முன்பு அரசு மருத்துவமனைகளின் முன்பு அரிசி கஞ்சியை வழங்கிய பின் பணிக்கு செல்வதை வழக்கமாக வைத்துள்ளார்.

கொரோனாவின் முதல் அலையின்போது, கொரோனாவால் உயிரிழந்தவர்களின் சடலங்களை தனி ஆளாக அடக்கம் செய்தவர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.