தமிழ்நாடு

சென்னையில் 1,158 தெருக்களில் கொரோனா பாதிப்பு - மாநகராட்சி அறிவிப்பு

சென்னையில் 1,158 தெருக்களில் கொரோனா பாதிப்பு - மாநகராட்சி அறிவிப்பு

newspt

சென்னையில் மொத்தமுள்ள 39,537 தெருக்களில், 1,158 தெருக்களில் கொரோனா பாதிப்பு உடையவர்கள் கண்டறியப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.

தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. அதன்படி தமிழகத்தில் நேற்று 1,03,119 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டதில், ஒரே நாளில் 1,728 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி இருந்தது. நேற்று முன்தினம் 1,594 பேருக்கு தொற்று உறுதியான நிலையில், கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

குறிப்பாக சென்னையில் நேற்று 876 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. ஒமைக்ரான் பாதிப்பிலும் தமிழகம் 6-வது இடத்தில் உள்ளது.

இந்நிலையில், சென்னையில் மொத்தமுள்ள 39,537 தெருக்களில் 1,158 தெருக்களில் கொரோனா பாதிப்பு உடையவர்கள் கண்டறியப்பட்டுள்ளனர். 38,379 தெருக்களில் கொரோனா பாதிப்பு எவருக்கும் இதுவரை கண்டறியப்படவில்லை.

988 தெருக்களில் 3-க்கும் குறைவான கொரோனா பாதித்தவர்கள் உள்ளனர். 170 தெருக்களில் 3-க்கும் மேற்பட்ட எண்ணிக்கையில் கொரோனா பாதித்தவர்கள் உள்ளனர். 86 தெருக்களில் 4-க்கும் மேற்பட்ட எண்ணிக்கையில் கொரோனா பாதித்தவர்கள் உள்ளனர். 51 தெருக்களில் 5-க்கும் மேற்பட்ட எண்ணிக்கையில் கொரோனா பாதித்தவர்கள் உள்ளனர்.

சென்னையில் மொத்தமாக 3,486 பேர் தற்போது கொரோனா பாதித்து சிகிச்சையில் உள்ளனர். அதிகபட்சமாக தேனாம்பேட்டை மண்டலத்தில் 228 தெருக்களில் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.

திருவொற்றியூர் மண்டலத்தில் 21 தெருக்கள், மணலி மண்டலத்தில் 17 தெருக்கள், மாதவரம் மண்டலத்தில் 40 தெருக்கள், தண்டையார்பேட்டை மண்டலத்தில் 80 தெருக்கள், ராயபுரம் மண்டலத்தில் 141 தெருக்கள், திரு வி க நகர் மண்டலத்தில் 46 தெருக்கள், அம்பத்தூர் மண்டலத்தில் 24 தெருக்கள், அண்ணா நகர் மண்டலத்தில் 82 தெருக்கள், கோடம்பாக்கம் மண்டலத்தில் 115 தெருக்கள், வளசரவாக்கம் மண்டலத்தில் 65 தெருக்கள், ஆலந்தூர் மண்டலத்தில் 83 தெருக்கள், அடையாறு மண்டலத்தில் 124 தெருக்கள், பெருங்குடி மண்டலத்தில் 44 தெருக்கள் மற்றும் சோலிங்கநல்லூர் மண்டலத்தில் 48 தெருக்களில் தொற்று கண்டறியப்பட்டுள்ளது.