தமிழ்நாடு

ஒரே கிராமத்தில் 50 பேருக்கு கொரோனா: கும்பலாக ஆம்புலன்ஸ்களில் ஏறிய அதிர்ச்சி சம்பவம்

ஒரே கிராமத்தில் 50 பேருக்கு கொரோனா: கும்பலாக ஆம்புலன்ஸ்களில் ஏறிய அதிர்ச்சி சம்பவம்

sharpana

மதுரையில் ஒரே கிராமத்தில் 50-க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தொற்று உறுதிபடுத்தப்பட்டதால் அனைவரும் கும்பல் கும்பலாக இரண்டு ஆம்புலன்ஸ்களில் சென்றது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள பொன்னமங்களம் கிராமத்தில் ஏற்கனவே 100-க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் கிராம மக்கள் அனைவருக்கும் பரிசோதனை செய்ததில், 50-க்கும் மேற்பட்டோருக்கு தொற்று கண்டறியப்பட்டது.

தொடர்ந்து அந்த கிராமத்தை தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவித்த சுகாதாரத் துறையினர், பாதிக்கப்பட்டோரை சிகிச்சைக்கு அழைத்து செல்ல அரசு ஆம்புலன்ஸை அழைத்திருந்தது. ஆனால், அரசு ஆம்புலன்ஸ் வர தாமதமானதாக கூறி, அந்த கிராம மக்களே 2 தனியார் ஆம்புலன்ஸ்களை வரவழைத்து கும்பலாக சிகிச்சை மையத்திற்கு சென்றனர்.

ஒரு ஆம்புலன்ஸில் தலா 25 கொரோனா பாதித்தோர் பயணித்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதுபற்றி மாவட்ட சுகாதாரப்பணிகள் துணை இயக்குநரிடம் கேட்டபோது, 22 பேருக்கு மட்டுமே தொற்று உறுதியானதாகவும், தங்களிடம் தெரிவிக்காமல் கிராமத்தைச் சேர்ந்தவர்களே தனியார் ஆம்புலன்ஸை ஏற்பாடு செய்துவிட்டதாகவும் விளக்கமளித்துள்ளார்.