தமிழ்நாடு

கொரோனா மரணம்: சடலத்தை புதைக்க எதிர்ப்பு தெரிவித்து விரட்டியடித்த ஊர் மக்கள்

கொரோனா மரணம்: சடலத்தை புதைக்க எதிர்ப்பு தெரிவித்து விரட்டியடித்த ஊர் மக்கள்

kaleelrahman

செங்கல்பட்டு அருகே கொரோனாவால் மரணமடைந்த சடலத்தை புதைக்க வந்தவர்களை ஊர்மக்கள் சடலத்தோடு விரட்டியடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

சென்னை பழைய ஜமீன் பல்லாவரம் வடக்கு அம்பேத்கர் தெரு பகுதியை சேர்ந்த கேந்த்ரபால் (60) என்பவர் மனைவி தமிழரசி (53). இவர், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரழந்தார்.

இதையடுத்து தனது மனைவியின் சடலத்தை செங்கல்பட்டு அடுத்துள்ள பெத்தேல்நகர் சுடுகாட்டில் புதைபதற்காக ஆம்புலன்ஸ் மூலம் கொண்டு வந்துள்ளனர். அப்போது தகவலறிந்து திரண்ட அப்பகுதி மக்கள் எந்தவித அனுமதியும் இல்லாமல் இங்கு சடலத்தை புதைக்க அனுமதிக்க முடியாது என எதிர்ப்பு தெரிவித்தனர்.

தகலறிந்த செங்கல்பட்டு தாலுகா காவல்துறை, வருவாய்துறையினர் சம்பவ இடத்திற்கு நேரில் வந்து இருதரப்பினரிடமும் சமரசம் பேசியும் சடலத்தை புதைக்க ஊர்மக்கள் ஒத்துழைக்காமல் நீண்ட நேரம் வாக்குவாதம் ஏற்பட்டதால் சடலத்தை எடுத்துக்கொண்டு ஓட்டம் பிடித்தனர். இச்சம்பவத்தால் அப்பகுதியே பெரும் பரபரப்பாக காணப்பட்டது.