தமிழ்நாடு

"தமிழகத்தில் கொரோனா ஏறுமுகம்; மக்கள் ஒத்துழைப்பு தேவை"-சுகாதாரத்துறை செயலாளர்

"தமிழகத்தில் கொரோனா ஏறுமுகம்; மக்கள் ஒத்துழைப்பு தேவை"-சுகாதாரத்துறை செயலாளர்

webteam

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு ஏறுமுகத்தில் உள்ளது என சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

இதுகுறித்து செய்தியாளர்களை சந்தித்த அவர், “பொதுமுடக்கம் போடும் சூழல் தற்போது இல்லை. வெண்டிலேட்டர் தேவையான அளவு இருக்கிறது. 2 வாரங்கள் மக்கள் ஒத்துழைப்பு தேவை. வீட்டில் இருந்து யாரால் வேலை பார்க்க முடியுமோ அவர்கள் தாமாக முன்வந்து வீட்டிலிருந்து வேலைப்பார்க்கலாம். அரசு உத்தரவிட வேண்டும் என எதிர்ப்பார்க்க வேண்டியதில்லை. அதன் மூலம் அரசு எடுக்கும் நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு கொடுக்கலாம்.

மாஸ்க் போடாத 2.39 லட்சம் பேரிடம் அபராதம் வசூல் செய்யப்பட்டுள்ளது. தேவையற்ற பயணங்களை பொதுமக்கள் தவிர்க்க வேண்டும்” என்றார்.