தமிழ்நாடு

"புதிய கட்டுப்பாடுகளை விதித்திருக்கும் அரசு டாஸ்மாக் கடைகளை மூடாதது ஏன்?" - தினகரன் கேள்வி

"புதிய கட்டுப்பாடுகளை விதித்திருக்கும் அரசு டாஸ்மாக் கடைகளை மூடாதது ஏன்?" - தினகரன் கேள்வி

Veeramani

தமிழ்நாட்டில் கொரோனா மூன்றாவது அலை தொடங்கியிருப்பதால் பல்வேறு புதிய கட்டுப்பாடுகளை விதித்திருக்கும் அரசு டாஸ்மாக் மதுக்கடைகளை மூடாதது ஏன் என்று டிடிவி.தினகரன் கேள்வி எழுப்பியுள்ளார்.

இது தொடர்பாக தினகரன் வெளியிட்டுள்ள ட்வீட்டில், "தமிழ்நாட்டில் கொரோனா மூன்றாவது அலை தொடங்கியிருப்பதால் பல்வேறு புதிய கட்டுப்பாடுகளை விதித்திருக்கிற முதலமைச்சர் திரு.ஸ்டாலின், டாஸ்மாக் மதுக்கடைகளை மூடாமல் விட்டிருப்பது ஏன்? நோய் பரப்பும் இடங்களாக செயல்படும் டாஸ்மாக் கடைகளையும், மதுபானக்கூடங்களையும்(Bar) மூடாமல் கொரோனாவைத் தடுக்கும் அரசின் நடவடிக்கைகள் முழுமை பெறாது.

தேவைப்பட்டால் இதுகுறித்து எதிர்க்கட்சி தலைவராக இருந்தபோது கடந்த ஆண்டுகளில் திரு.ஸ்டாலின் விடுத்த அறிக்கைகளை அவரே திரும்ப எடுத்து படித்து பார்த்து கொள்ளலாம்." என தெரிவித்துள்ளார்