தமிழ்நாடு

சிவப்பு நிறமா‌க‌ மாறும் சமைத்த‌ உணவு: மக்கள் அதிர்ச்சி

சிவப்பு நிறமா‌க‌ மாறும் சமைத்த‌ உணவு: மக்கள் அதிர்ச்சி

Rasus

தேனி மாவட்டம் சங்ககோனம்பட்டியில், சமைத்த அரிசி உணவு சிவப்பு‌ நிறமாக மாறுவதாக புகார் எழுந்துள்ளது.

முதல்‌நாள் சமைத்த‌‌ உண‌வை மறுநாள் காலையில் பார்த்தால் அது சிவப்பு நிறத்துடன் காணப்படுவதாக சீனிவாசன் என்பவர் அளித்த புகாரின் அடிப்படையில், உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் ஆய்வு நடத்தினர். மேலும், அரிசியின் மாதிரியை அதி‌காரிகள் சோதனைக்கு எடுத்துச்சென்றனர். முதல்நாள் சமைத்த உணவு மறுநாள் காலையில் சிவப்பு நிறமாக மாறுவதால் அப்பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். ‌