திருவள்ளூர் சாலை pt desk
தமிழ்நாடு

திருவள்ளூர்: இது ப்ளீச்சிங் பவுடரா? மைதா மாவா? தூய்மைப் பணியில் புதிய சர்ச்சை...!

திருவள்ளூர் அருகே மழை பாதித்த இடங்களில் தூய்மைப் பணிகளை மேற்கொள்ளும் போது ப்ளீச்சிங் பவுடருக்கு பதிலாக மைதா மாவு போடப்பட்டதாக சர்ச்சை எழுந்துள்ளது.

webteam

மிக்ஜாம் புயலால் ஏற்பட்ட கனமழையால் செங்குன்றம் நாரவாரிகுப்பம் பேரூராட்சியில் வீடுகள், குடியிருப்பு பகுதிகள் வெள்ள பாதிப்பை சந்தித்தன. தற்போது அங்கு தூய்மைப்பணிகள் நடைபெற்று வரும் நிலையில், பல இடங்களில் நோய் தொற்றை தடுக்க ப்ளீச்சிங் பவுடர் போடப்பட்டுள்ளது.

ப்ளீச்சிங் பவுடரா, மைதா மாவா?

இதனிடையே வைத்தீஸ்வரன் தெரு, ஆரம்ப சுகாதார நிலையம் பகுதி உள்ளிட்ட இடங்களில் ப்ளீச்சிங் பவுடருக்கு பதிலாக தூய்மைப் பணியாளர்கள் மைதா மாவை போட்டதாக புகார் எழுந்தது.

இது தொடர்பாக திருவள்ளூர் மாவட்ட பேரூராட்சிகளின் உதவி இயக்குநர் ஜெயக்குமாரிடம் கேட்ட போது, “தூய்மைப் பணிக்காக ப்ளீச்சிங் பவுடருடன் சுண்ணாம்பு கலந்து தூய்மைப் பணியாளர்கள் மூட்டைகளை கட்டும்போது தவறுதலாக மாறி இருக்கலாம். இதில் மைதா மாவு கலக்கப்படவில்லை” என விளக்கம் அளித்தார்.