தமிழகத்தில் மின்வாரிய ஒப்பந்ததாரர்களிடம் பணிபுரியும் ஒப்பந்த தொழிலாளர்கள் ஆந்திராவில் தஞ்சம் அடைந்திருக்கின்றனர். ஒப்பந்த தொழிலாளராக அரசு அறிவிக்க வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை வைக்கின்றனர்.
தமிழகத்தில் உள்ள அனல் மின் நிலையங்கள் மற்றும் பகிர்மான கழகங்களில் ஒப்பந்ததாரர்களிடம் பணிபுரியும் தொழிலாளர்கள் நேற்று சென்னையில் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இந்த நிலையில் ரயில் மார்க்கமாக ஆந்திராவிற்கு சென்று அவர்கள் சூலூர்பேட்டையில் தஞ்சமடைந்துள்ளனர்.
பல கட்ட போராட்டங்களை நடத்தியும் கூட அரசு நேரடியாக ஒப்பந்த தொழிலாளர்களாக அறிவிக்க வேண்டும் என்பதை இதுவரை அறிவிக்கவில்லை எனவும், கடந்த 2013 ஆண்டுகளில் இருந்ததைப் போலவே மீண்டும் ஒப்பந்த தொழிலாளர்களாக நியமனம் செய்ய வேண்டும். குறைந்தபட்ச தினக்கூலியாக 350 ரூபாய் அரசு வழங்க வேண்டும், விபத்தில் உயிரிழக்கும் தொழிலாளர்களுக்கு அரசே இழப்பீடு வழங்க வேண்டும் என்பன உள்ளிட கோரிக்கைகளை வலியுறுத்தி அவர்கள் ஆந்திராவில் தங்கி உள்ளனர்.
இந்த நிலையில் திருப்பதியில் உள்ள மாவட்ட ஆட்சியரிடம் இது தொடர்பான கோரிக்கை மனுக்கள் அளிக்க உள்ளதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.
- எழில்