தமிழ்நாடு

அரசு அறிவித்த நிவாரணம் எங்கே? - கட்டடத்தொழிலாளர்கள் போராட்டம்

அரசு அறிவித்த நிவாரணம் எங்கே? - கட்டடத்தொழிலாளர்கள் போராட்டம்

webteam

கொரோனா தொற்றால் வாழ்வாதாரத்தை இழந்துள்ள கட்டிடத்தொழிலாளர்கள் பெரும்பாலானோருக்கு நிவாரணத்தொகை சரியாக வந்து சேரவில்லை என தெரிவித்து தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

தொழில்துறையினர் முதல் தொழிலாளர்கள் வரை பொருளாதாரத்தில் கொரோனா தொற்று பெரிய பாதிப்பை சந்திக்க வைத்துள்ளது. இதில் பல்வேறு துறைகளில் தினக்கூலி தொழிலாளர்கள் வேலை இழந்து அன்றாட அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்ய முடியாமல் தவித்து வருகின்றனர். இதில் கட்டிடத்தொழிலாளர்கள் பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், கொரோனா காலத்தில் அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு அறிவிக்கப்பட்ட நிவாரணத் தொகை அனைவருக்கும் முழுமையாக வந்து சேரவில்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது. 

வேலை இழந்து தவிக்கும் கட்டிடத்தொழிலாளர்களுக்கு மாதம் 5 ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும் எனவும், பதிவு புதிப்பிக்காத தொழிலாளர்களுக்கும் நிவாரணம் வழங்க வேண்டும் எனவும் கோரிக்கைகளை வலியுறுத்தி வருகின்றனனர். 

இந்நிலையில் இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று நாடு முழுவதும் அமைப்புசாரா தொழிலாளர்கள் கண்டன போராட்டத்தில் ஈடுபட்டனர். கோவையில் துடியலூர் பகுதியில் கட்டிடத்தொழிலாளர் மத்திய சங்கம் சார்பில் நடைபெற்ற கண்டன போராட்டத்தில் தொழிலாளர்கள் தங்களது கோரிக்கை பதாகைகளை உடலில் அணிந்தபடி கோஷங்களை எழுப்பினர். நீண்ட நாட்களாக போராடியும் பலன் கிடைக்கவில்லை என தொழிலாளர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.