தமிழ்நாடு

வாட்ச் விவகாரத்தில் அண்ணாமலை ஏன் உண்மையை மறைக்கிறார்? - கே.எஸ் அழகிரி கேள்வி

வாட்ச் விவகாரத்தில் அண்ணாமலை ஏன் உண்மையை மறைக்கிறார்? - கே.எஸ் அழகிரி கேள்வி

webteam

பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை வாட்ச் விவகாரத்தில் ஏன் உண்மையை மறைக்கிறார்; தமிழகத்தில் அவர் மேற்கொள்ள உள்ள பாதயாத்திரையால் எந்த பயனும் இல்லை என தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.

தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி சென்னை சத்தியமூர்த்தி பவனில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், ராகுல் காந்தியின் நடைப்பயணத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டுள்ளனர். சமூக மேம்பாட்டிற்காக ராகுல் காந்தி நடைபயணம் மேற்கொள்கிறார். இந்த நடைப்பயணத்தில் நடிகர் கமல்ஹாசன் வருகிற 24-ந் தேதி கலந்துகொள்வது மகிழ்ச்சி அளிக்கிறது. ராகுல் காந்தியின் நடை பயணத்தில் நடிகர் கமலஹாசன் கலந்து கொள்வது அரசியலுக்கு அப்பாற்பட்டதாகும்.‌

தமிழகம் முழுவதும் பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை நடைபயணம் மேற்கொள்வது எந்த பயனையும் தராது. ராகுல் காந்தி மேற்கொள்ளும் நடைபயணம் வேறு; அண்ணாமலை மேற்கொள்ள இருப்பது வேறு. கமல்ஹாசன் பண்பானவர். அவர் தலைவர் ராகுல் காந்தியுடன் இணைந்து நடப்பது மகிழ்ச்சி. கூட்டணி என்பது அடுத்தது. அண்ணாமலை எந்த வாட்ச் கட்டினா என்ன? அதனால் தமிழகத்துக்கு எந்த பயன்? ரபேலில் வாங்கினால் வாங்கினேன் என சொல்லட்டும். அவர் உண்மையை சொல்லலாம். எதற்கு உண்மை மறைக்கிறார்? இது மிகப்பெரிய விவாத பொருளாக ஆவது நல்லதல்ல என்றார்.