தமிழ்நாடு

ப.சிதம்பரத்தை கைது செய்ய அவசரப்படுவது ஏன்? - காங்கிரஸ் 

ப.சிதம்பரத்தை கைது செய்ய அவசரப்படுவது ஏன்? - காங்கிரஸ் 

webteam

முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரத்தை அரசியல் ரீதியாக பழிவாங்கும் நோக்கில் மத்திய அரசு செயல்பட்டு வருவதாக காங்கிரஸ் கட்சி குற்றஞ்சாட்டியுள்ளது.

இது குறித்து பேசிய காங்கிரஸ் கட்சியின் மூத்த செய்தித் தொடர்பாளர் ஆனந்த் சர்மா, ப.சிதம்பரம் முன் ஜாமீன் கோரி உச்ச நீதிமன்றத்தை அணுகியுள்ள நிலையில் அவரை கைது செய்ய சிபிஐ அதிகாரிகள் அவசரப்படுவது ஏன் என கேள்வி எழுப்பியுள்ளார். ப.சிதம்பரம் சட்டத்தை மதித்து நடக்கிற, வழக்கு விசாரணைகளுக்கு ஒத்துழைக்கிற குடிமகன் என்றும் அவ்வாறு இருக்கையில் ஒரு வழக்கு தொடர்பாக அவரை கைது செய்து விசாரிக்க வேண்டிய அவசியம் என்ன என்றும் ஆனந்த் சர்மா வினவினார். 

இதற்கு முன் வழக்கு விசாரணைகளின் போது அவர் நேரில் ஆஜராகி விளக்கம் அளித்துள்ளதாகவும் ஆனந்த் சர்மா தெரிவித்தார். எதிர்க்கட்சிகளின் தலைவர்களை பழிவாங்கும் நோக்கில் அரசு அமைப்புகள் பயன்படுத்தப்பட்டு வருவதாகவும் ஆனந்த் சர்மா குற்றஞ்சாட்டினார். பாஜக தலைவரகள் பலர் மீது தீவிரமான குற்றச்சாட்டுகள் இருப்பதாகவும் ஆனால் அவற்றின் மீது மத்திய அரசு மவுனம் காத்து வருவதாகவும் ஆனந்த் சர்மா தெரிவித்துள்ளார்.