தமிழ்நாடு

ஒரே தலைமை வேண்டும்! - அதிமுக எம்.எல்.ஏக்கள் கூட்டத்தில் கடும் வாக்குவாதம்

ஒரே தலைமை வேண்டும்! - அதிமுக எம்.எல்.ஏக்கள் கூட்டத்தில் கடும் வாக்குவாதம்

Sinekadhara

அதிமுக எம்.எல்.ஏக்கள் கூட்டத்தில் கட்சிக்கு ஒரே தலைமை வேண்டுமென ஈபிஎஸ், ஓபிஎஸ் ஆதரவாளர்களிடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

தேர்ந்தெடுக்கப்பட்ட அதிமுக எம்.எல்.ஏக்கள் கூட்டம் சென்னை ராயப்பேட்டையிலுள்ள அதிமுக கட்சித் தலைமை அலுவலகத்தில் நடைபெற்று வருகிறது. ஈபிஎஸ்- ஓபிஎஸ் தலைமையில் நடைபெறும் இந்தக் கூட்டத்தில் 63 எம்.எல்.ஏக்கள் பங்கேற்றுள்ளனர். 3 எம்.எல்.ஏக்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால் அவர்கள் பங்கேற்கவில்லை. இந்தக் கூட்டத்தில் கட்சிக்கு ஒரே தலைமை வேண்டுமென ஈபிஎஸ், ஓபிஎஸ் ஆதரவாளர்களிடையே கடும் வாக்குவாதம் நடைபெற்று வருகிறது.