தமிழ்நாடு

நம்பிக்கை வாக்கெடுப்பு வழக்கு.... பேரவை செயலருக்கு நோட்டீஸ்

webteam

நம்பிக்கை வாக்கெடுப்பு தொடர்பான வழக்கில் சட்டப்பேரவை செயலருக்கு உயர் நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

சட்டப்பேரவையில் கடந்த 18-ஆம் தேதி முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அரசு நம்பிக்கை வாக்கெடுப்பு கோரியது. இதை ரகசிய வாக்கெடுப்பாக நடத்த வேண்டும் என திமுக தரப்பில் வலியுறுத்தப்பட்டது. திமுக கோரிக்கையை சபாநாயகர் தனபால் நிராகரித்தார். இதனால் திமுக எம்.எல்.ஏக்கள் சட்டப்பேரவைக்குள்ளேயே போராட்டம் நடத்தினர். இதையடுத்து திமுக உறுப்பினர்கள் அனைவரும் வெளியேற்றப்பட்டனர்.

இதனைத் தொடர்ந்து, நம்பிக்கை வாக்கெடுப்பு முறையாக நடைபெறவில்லை எனவும் வாக்கெடுப்பு செல்லாது என அறிவிக்க வேண்டும் எனக் கோரியும் திமுக சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இது தொடர்பான விசாரணையில், முதலமைச்சர், தலைமைச் செயலாளர், மத்திய உள்துறை செயலாளர் ஆகியோர் 2 வாரத்தில் பதில் அளிக்க நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. மேலும், வழக்கு விசாரணையை மார்ச் 10 ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டுள்ளது.