த.செ. ஞானவேல், ரஜினிகாந்த் pt web
தமிழ்நாடு

"அரசு பள்ளியை தவறாக சித்தரிக்கிறது” வேட்டையன் இயக்குநர் ஞானவேல் மீது காவல்நிலையத்தில் புகார்

வேட்டையன் திரைப்படத்தில் கோவில்பட்டி அரசு பள்ளி தொடர்பாக இடம்பெற்ற காட்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து, இயக்குநர் ஞானவேல் மீது காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

PT WEB

ரஜினிகாந்த் - ஞானவேல் கூட்டணியில் வேட்டையன் திரைப்படம் நேற்று வெளியானது. படத்தின் தொடக்கத்தில் அரசு பள்ளி மாணவர்கள் குறித்து சில காட்சிகள் இடம்பெற்றிருக்கும். அதில் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி காந்தி நகரில் உள்ள அரசு பள்ளி மாணவர்கள் ஆசிரியரை படம் பிடித்து, தவறாக சித்தரித்து சமூக வலைதளங்களில் பரப்பியதால் சர்ச்சை என்ற வாசகம் இடம் பெற்றிருக்கும்.

வேட்டையன்

இந்த காட்சிகள் அந்த பள்ளியை சித்தரிப்பதாக இருப்பதால் அதனை நீக்க வேண்டும் என்றும், படத்தின் இயக்குநர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோவில்பட்டி சமூக ஆர்வலர் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் ராஜேஷ் கண்ணா என்பவர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

இந்நிலையில் அப்பகுதியை சேர்ந்த மக்கள், அரசு பள்ளியை படத்தில் தவறாக சித்தரித்து உள்ளதற்கு எதிர்ப்பு தெரிவித்து திரையரங்கை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியதையடுத்து, போராட்டத்தை கைவிட்டனர்.