தமிழ்நாடு

கொடுத்த கடனை அடாவடியாக வசூலிப்பதாக தனியார் நிதி நிறுவனங்கள் மீது புகார்

கொடுத்த கடனை அடாவடியாக வசூலிப்பதாக தனியார் நிதி நிறுவனங்கள் மீது புகார்

kaleelrahman

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் ஊரடங்கு காலத்தில் அடாவடியாக பணம் வசூலிப்பதாக தனியார் நிதி நிறுவனங்கள் மீது பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

ஸ்ரீவில்லிபுத்தூரில் கடனாக பெற்ற தொகையை தனியார் நிறுவனங்கள் அடாவடியாக வசூலிப்பதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். தமிழகம் முழுவதும் கொரோனா இரண்டாவது அலை வேகமாக பரவி வரும் நிலையில் அரசு ஊரடங்கு உள்ளிட்ட பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

இந்த ஊரடங்கின் போது நடுத்தர மற்றும் ஏழை எளிய மக்கள் வேலையின்மையால் வருமானம் இன்றி சிரமப்பட்டு வருகின்றனர். இதனால் மின் கட்டணம் செலுத்துவதற்கு அவகாசம் கொடுப்பது மற்றும் பல்வேறு நடவடிக்கைகளை அரசு எடுத்து வருகிறது.

இந்நிலையில் மகளிர் சுய உதவிக் குழு உள்ளிட்ட பெண்கள் அமைப்பினர் எல்ரூடி மற்றும் மதுரா உள்ளிட்ட தனியார் நிறுவனங்களிடம் ஏற்கெனவே பெற்ற கடனுக்கான மாதாந்திர தொகையை அடாவடியாக மேற்படி நிறுவனங்கள் வசூலித்து வருகிறது.

இது தொடர்பாக தமிழகம் முழுவதும் உள்ள தனியார் நிதி நிறுவனங்களுக்கு இதுபோன்ற காலகட்டத்தில் மாதாந்திரத் தொகையை வசூலிக்கக்கூடாது என்று அரசு உத்தரவு பிறப்பித்திருந்தது. அதையும் மீறி எல்ரூடி மதுரா போன்ற தனியார் நிதி நிறுவனங்கள் பெண்களை மிரட்டி பணம் வசூலித்து வருகிறது.

ஸ்ரீவில்லிபுத்தூர் நகர் மற்றும் அருகே உள்ளகூமாப்பட்டி, வத்திராயிருப்பு, கிருஷ்ணன்கோவில் உள்ளிட்ட கிராமங்களில் மேற்படி நிதி நிறுவன அதிகாரிகள் தொடர் மிரட்டலில் ஈடுபட்டு வருவதாக அப்பகுதி மக்கள் புகார் தெரிவித்துள்ளனர். உடனடியாக மாவட்ட நிர்வாகம் மற்றும் தமிழக அரசு இதில் தலையிட்டு சுமூக முடிவு எடுக்க வேண்டும் என மகளிர் சுய உதவிக்குழுவினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.