இசையமைப்பாளர் இளையராஜாவின் கருத்துக்களால், தாங்கள் மனதளவில் பாதிப்புக்குள்ளாவதாக கிறிஸ்தவ நல்லெண்ண இயக்கத்தினர் குற்றம்சாட்டியுள்ளனர்.
நிகழ்ச்சி ஒன்றில் பேசிய இளையராஜா, “ உலகத்திலேயே தோன்றிய ஞானிகளில் பகவான் ரமண மகிரிஷியை போல வேறு ஒருவர் கிடையாது. இயேசு உயிரித்தெழுந்து வந்தார் என சொல்வார்கள். அடிக்கடி டாக்குமென்டரி பார்ப்பதை வழக்கமாக கொண்டுள்ளேன். அதில் இயேசு உயிரித்தெழுந்து வந்தார் என நிரூபணமாகவில்லை என சொல்லப்படுகிறது. உண்மையான உயிர்தெழுதல் நடந்தது ஒரே ஒருவருக்குத்தான். அது பகவான் ரமண மகரிஷிக்கு மட்டும்தான்” என்று கூறியிருந்தார்.
இந்நிலையில் இளையராஜா மீது நடவடிக்கை எடுக்கக்கோரி கிறிஸ்தவ நல்லெண்ண இயக்கம் சார்பில் சென்னை பெருநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. அதில், இயேசுவின் உயிர்தெழுதலைக் குறித்து இளையராஜா பேசிய கருத்துகள், கிறிஸ்தவர்கள் மனதை புண்படுத்துவதாக உள்ளன என குற்றம்சாட்டப்பட்டுள்ளது. மேலும் சமூக வலைதளங்களில் பரவிவருவதால், தாங்கள் மனதளவில் பாதிப்புக்குள்ளாவதாக அவர் புகாரில் குறிப்பிட்டுள்ளனர்.