நாசாவின் பார்க்கர் - இஸ்ரோவின் ஆதித்யா எல்1 Twitter
தமிழ்நாடு

‘நோக்கம் ஒன்றுதான்; ஆனால்...’ நாசாவின் பார்க்கர் - இஸ்ரோவின் ஆதித்யா எல்1 - ஓர் ஒப்பீடு

மனிதர்கள் இதுவரை அனுப்பியதிலேயே சூரியனுக்கு மிக அருகே சென்ற விண்கலம் என்கிற பெருமையை பெற்றிருப்பது நாசாவின் பார்க்கர் விண்கலம். இதற்கும் ஆதித்யா எல்1 விண்கலத்துக்குமான ஒப்பீடைப் பார்க்கலாம்.

webteam

செய்தியாளர்: பால வெற்றிவேல்

அமெரிக்காவின் விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசாவின் பார்க்கருக்கும், இந்தியாவின் இஸ்ரோ அனுப்பிய ஆதித்யா எல் ஒன் விண்கலத்துக்கும் ஒரே நோக்கம்தான். பூமியில் இருந்து 15 கோடி கிலோமீட்டர் தொலைவில் உள்ள சூரியனை ஆராய்வதுதான் அந்த நோக்கம்.

aditya L1

நாசாவின் பார்க்கர் விண்கலம் 2018 ஆம் ஆண்டு அனுப்பப்பட்டது. ஆதித்யா 2023 ஆம் ஆண்டு அனுப்பப்பட்டது. பார்க்கரின் எடை 685 கிலோவாக உள்ள நிலையில், ஆதித்யாவின் எடை அதைவிட இருமடங்குக்கு மேல் அதிகம். ஆதித்யா விண்கலத்தின் எடை 1,475 கிலோவாக இருக்கிறது. அதேநேரம் பார்க்கர் விண்கலத்திற்கான செலவு 12 ஆயிரம் கோடி ரூபாயாக இருக்கிறது. ஆதித்யாவுக்கான செலவு 380 கோடி ரூபாய் மட்டுமே.

பார்க்கரை பொறுத்தவரை சூரியனை மிகவும் நெருங்கி ஆராய்வதுதான் இதன் இலக்கு. இதனால் இதுவரை எந்த விண்கலமும் நெருங்காத அளவுக்கு 62 லட்சம் கிலோமீட்டர் தொலைவில் இருந்து பார்க்கர், சூரியனை ஆய்வு செய்கிறது. அதேநேரம், பூமியில் இருந்து 15 லட்சம் கிலோமீட்டர் தொலைவில் உள்ள லக்ராஞ்சியன் புள்ளியில் இருந்து ஆராய்கிறது ஆதித்யா. பார்க்கரில் 6 ஆய்வுக் கருவிகள் உள்ள சூழலில், ஆதித்யாவில் 7 ஆய்வுக் கருவிகள் உள்ளன. பார்க்கரின்ஆயுட்காலம் 7 ஆண்டு காலமாக உள்ள நிலையில், ஆதித்யா 5 ஆண்டுகள் செயல்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.