தமிழ்நாடு

மு.க.ஸ்டாலினுடன் சீதாராம் யெச்சூரி சந்திப்பு - உறுதியாகும் கூட்டணி

மு.க.ஸ்டாலினுடன் சீதாராம் யெச்சூரி சந்திப்பு - உறுதியாகும் கூட்டணி

webteam

திமுக தலைவர் ஸ்டாலினை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி சந்தித்து பேசினார்.

சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள ஸ்டாலின் இல்லத்தில் ஸ்டாலின் மற்றும் யெச்சூரி சந்திப்பு நடைபெற்றது. சந்திப்பு குறித்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த சீதாராம் யெச்சூரி, இந்தியா பாதுகாக்கப்பட வேண்டும் என்பதற்காகவே ஸ்டாலினை சந்தித்ததாக தெரிவித்தார். இந்தியா பாதுகாக்கப்பட வேண்டும் என்பதற்காக ‌ஒன்றிணைய தேசப்பற்றுள்ள, மதச்சார்பற்ற அரசியல் கட்சிகள் தீர்மானித்து வருவதாக அவர் கூறினார். 

இச்சந்திப்பின்போது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் டி.ராஜா, திமுக எம்.பி.க்கள் கனிமொழி, திருச்சி சிவா உள்ளிட்டோர் உடன் இருந்தனர். பாரதிய ஜனதா கட்சியை வீழ்த்தும் வகையில் மதச்சார்பற்ற மெகா கூட்டணி ‌அமைக்கும் முயற்சியில் ஈடுபட்டுவரும் ஆந்திர மாநில முதல்வர் சந்தி‌ரபாபு நாயுடு, கடந்த 9-ம் தேதி திமுக தலைவர் ஸ்டாலினை சந்தித்துப்பேசிய நிலையில், சீதாராம் யெச்சூரியும் சந்தித்துள்ளது முக்கியத்துவம் பெறுகிறது. 

இதுதொடர்பாக ட்விட்டரில் பதிவிட்டுள்ள ஸ்டாலின், சீதாராம் யெச்சூரியுடன் ஒரு சிறப்பான சந்திப்பு நடைபெற்றதாக தெரிவித்துள்ளார். அத்துடன் 2019ஆம் ஆண்டு பொதுத்தேர்தலில் பாஜக அரசை எதிர்த்து கூட்டணி அமைப்பது தொடர்பாக பேசியதாகவும் குறிப்பிட்டுள்ளார்.