தமிழ்நாடு

தூத்துக்குடியில் கமாண்டோ படை அணிவகுப்பு

தூத்துக்குடியில் கமாண்டோ படை அணிவகுப்பு

webteam

தூத்துக்குடி அண்ணாநகரில் ஆயுதம் ஏந்திய கமாண்டோ படையினர் அணிவகுப்பு நடத்தினர்.

தூத்துக்குடி மாவட்டத்தில் அமைந்துள்ள ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த 22ஆம் தேதி போராட்டம் நடைப்பெற்றது. இந்தப் போராட்டத்தில் கல்வீச்சு சம்பவங்கள், வாகனங்கள் எரிக்கப்பட்டதையடுத்து காவல்துறையினர் துப்பாக்கிச்சூடு நடத்தி போராட்டக்காரர்களை கலைத்தனர். துப்பாக்கிச் சூட்டில் 10க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்தனர். இச்சம்பவத்தில் காயமடைந்த 70க்கும் அதிகமானோர் தூத்துக்குடி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். போராட்டத்தின் காரணமாக தூத்துக்குடி மாவட்டத்தில் 23 - 25ஆம் தேதி வரை 144தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில் தூத்துக்குடியில் நிலவும் அசாதாரண சூழலை கட்டுப்படுத்த கமாண்டோ படை, அதிரடிப்படையினர் குவிக்கப்பட்டுள்ளனர். அரசு மருத்துவமனைக்கு அருகில் உள்ள அண்ணாநகரில் 100க்கும் மேற்பட்ட கமாண்டோ படை வீரர்கள், 500க்கும் மேற்பட்ட அதிரடிப்படையினர் அணி வகுப்பு நடத்தினர். அண்ணா நகரில் ஐ.ஜிக்கள் வரதராஜ், சண்முகராஜ் தலைமையில் காவலர்கள் அணிவகுப்பு நடத்தினர். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வஜ்ரா வாகனங்கள், தீயணைப்பு வாகனங்களும் நிறுத்திவைக்கப்பட்டுள்ளன.