தமிழ்நாடு

வடிவேல் மீம்ஸ்களால் விழிப்புணர்வு .. அசத்தும் நெல்லை காவல்துறை

வடிவேல் மீம்ஸ்களால் விழிப்புணர்வு .. அசத்தும் நெல்லை காவல்துறை

rajakannan

நகைச்சுவை நடிகர் வடிவேலுவின் காமெடி மீம்ஸ்களை பயன்படுத்தி நெல்லை மாநகர காவல்துறையினர் மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர்.  

நெல்லை மாநகர காவல்துறை மக்கள் நலனிற்காக சமூக வலைதளங்களான ட்விட்டர், வாட்சப், பேஸ்புக், யூடியூப், இன்ஸ்டாகிராம் என அனைத்து சமூக வலைதளங்களையும் பயன்படுத்தி வருகிறது. இதன் அடுத்தகட்டமாக சமூக வலைதளங்களில் நகைச்சுவை நடிகர் வடிவேலுவின் காமெடி மீம்ஸ்களை கொண்டு மக்களிடையே ஹெல்மட்? ஏடிஎம் பாஸ்வேர்டு திருட்டு, சைல்டுலைன் போன்றவை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் புது முயற்சியினை நெல்லை காவல்துறை தொடங்கியுள்ளது. நெல்லை மாநகர காவல்துறை துணை ஆணையர் சரவணன் இதனை தொடங்கி வைத்தார். 

உதாரணமாக, “போலிஸ் என்ன தொரத்திட்டு வருது நா என்ன சொன்னேன்னு கேட்பாங்க எதையுமே சொல்லிடாதீங்க அடிச்சு கேட்டாலும் சொல்லிடாதீங்க” என வடிவேலும் பிரபலமான காமெடி காட்சி ஒன்று உண்டு. பல விஷயங்களுக்கு இந்த காட்சியை பயன்படுத்துவார்கள். அதேபோல், ஏடிஎம் பாஸ்வேர்டு பத்தி அடிச்சி கேட்டாலும் சொல்லாதீங்க என்று மீம்ஸ் உருவாக்கியுள்ளார்கள். இந்த நகைச்சுவையான மீம்ஸ் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. 

இணையதள மக்களின் இந்த வரவேற்பை தொடர்ந்து, சிசிடிவி பொருத்துவதன் மூலம் திருட்டை தடுப்பது, கல்லுரி செல்லும் பெண்களின் பாதுகாப்பு என அடுத்தடுத்து மீம்ஸ்களை ஆர்வமாக உருவாக்கி வருகின்றனர். அதேபோல், திருக்குறள், தமிழ் இலக்கணம் உள்ளிட்ட பல விஷயங்களுக்கும் வடிவேலு மீம்ஸ் உருவாக்காப்பட்டு வருகிறது.