தமிழ்நாடு

மின்கம்ப விபத்தில் உயிரிழந்த மின்வாரிய ஊழியர் குடும்பத்துக்கு சக ஊழியர்கள் நிதியுதவி

மின்கம்ப விபத்தில் உயிரிழந்த மின்வாரிய ஊழியர் குடும்பத்துக்கு சக ஊழியர்கள் நிதியுதவி

webteam

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள திருத்தங்கல் பகுதியில் புதியதாக மின் இணைப்பு கொடுக்கும் பணியின்போது மின் கம்பம் உடைந்து மின் வாரிய ஊழியரொருவர் உயிரிழந்திருந்தார். அவரது குடும்பத்திற்கு, அவருடன் பணியாற்றிய சக தொழிலாளர்கள் நிதியுதவி அளித்து உதவியுள்ளனர். இச்சம்பவம், நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குடும்பத்திற்கு, அவருடன் பணியாற்றிய சக தொழிலாளர்கள் நிதியுதவி அளித்து உதவியுள்ளனர். இச்சம்பவம், நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சிவகாசி திருத்தங்கல் அருகே உள்ளது கண்ணன் காலனி - இந்தப் பகுதியில் புதியதாக மின்சார இணைப்பு கொடுப்பதற்காக கடந்த 4ம் தேதி, மின்வாரிய ஊழியர்கள் காளிராஜ் மற்றும் முருகேசன் புதிதாக அமைக்கப்பட்ட மின்கம்பத்தில் பணியில் ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் புதிதாக அமைக்கப்பட்ட அந்த மின் கம்பம் திடீரென உடைந்து விழுந்தது. அதனால் பணியில் ஈடுபட்டிருந்த மின்வாரிய ஊழியர் காளிராஜ், தலையில் பலத்த காயத்துடன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும் முருகேசன் பலத்த காயமடைந்து சிவகாசி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுட்டார். இதுதொடர்பாக திருத்தங்கல் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்த நிலையில், தற்போது விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் உயிரிழந்த காளிராஜ் குடும்பத்திற்கு மின்வாரிய தொழிலாளர்கள் இணைந்து, ஒரு லட்சம் ரூபாய் நிதி உதவி அளித்தனர். காளிராஜ் குடும்பத்தினர், “இதுபோன்ற தரமற்ற மின் கம்பங்கள் உடைந்து விழுந்து உயிரிழந்தது இதுவே கடைசியாக இருக்க வேண்டும். தரமான முறையில் மின் கம்பங்கள் கொடுக்கப்பட வேண்டும். அரசு தரப்பிலிருந்து எங்கள் குடும்பத்துக்கு உரிய நிவாரணம் மற்றும் அரசு வேலை வழங்க வேண்டும்” என கோரிக்கை விடுத்துள்ளனர்.