sharmila ptr desk
தமிழ்நாடு

"Popularity-க்காக ஒவ்வொருத்தரையா கூட்டிக்கிட்டு வர்றீயா"–பணிநீக்கம் ஏன்?-கோவை பெண் ஓட்டுநர் விளக்கம்

இன்று காலை தனியார் பேருந்தில் வேலை செய்யும் பெண் ஓட்டுநருடன் பேருந்தில் திமுக எம்பி கனிமொழி பயணம் செய்தநிலையில், தற்போது ஓட்டுநர் சர்மிளா பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

webteam

கோவையைச் சேர்ந்த ஷர்மிளா என்பவர் தனியார் பேருந்தில் ஓட்டுநராக பணியாற்றி வருகிறார். கோவையில் முதல் பெண் ஓட்டுநர் என்ற பெருமையை பெற்றதால் பிரபலமாகியுள்ளார். இவரை அரசியல் தலைவர்கள் உள்ளிட்ட பலரும் பேருந்திற்கே வந்து சந்தித்து வாழ்த்தி வருகின்றனர். கடந்த வாரம் பாஜக எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் சந்தித்த நிலையில் இன்று காலை திமுக எம்பி கனிமொழி பேருந்தில் பயணம் செய்து ஓட்டுநர் ஷர்மிளாவை வாழ்த்தினார். இத்தகைய சூழலில் ஓட்டுநர் ஷர்மிளா பணியில் இருந்து நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியானது.

பணிநீக்கம் செய்யப்பட்ட தனியார் பேருந்து பெண் ஓட்டுனர் ஷர்மிளா செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர்...

”காலைல 8 மணிக்கு கனிமொழி மேடம் வர்றதா சொல்லியிருந்தாங்க. அதே மாதிரி என்னை பார்த்துட்டு போறதுக்கு அவங்க வந்திருந்தாங்க. கனிமொழி மேடம் வண்டியில வந்திருந்தாங்க நான், அவங்களுக்கு முன்னாடி உட்கார இடம் கொடுத்தேன். அவங்களும் உட்கார்ந்து வந்துக்கிட்டு இருந்தாங்க. அப்போது எங்க வண்டியில லேடி கண்டக்டர் ஒருத்தரை வேலைக்கி போட்டிருக்காங்க. அவங்களும் 3 நாளா ஓடிக்கிட்டு இருக்காங்க. அவங்க, எத்தனை பேரு வந்திருக்கீங்க யாரா வேணுமானலும் இருங்க என அவங்க மனசு புண்படும்படி பேசுனாங்க.

mp kanimozhi

அப்படியெல்லாம் பேசாதீங்க. அவங்க ஒரு இடத்துல இருக்காங்க மரியாதை கொடுக்கணும்னு சொன்னேன். ஆனா, நான் சொன்னத அவங்க கேட்கவே இல்ல. கனிமொழி மேடத்தோட பிஏ 120 ரூபாய் கொடுத்தாங்க பணத்தை வாங்கி டிக்கெட்டை கொடுத்துட்டு அந்த லேடி போயிருச்சு. எனக்கு சங்கடமா இருந்ததால காந்திபுரத்துக்கு போனதும் ஆபீஸ்ல போய் சொல்லலாம்னு போனேன். அப்ப நான் சொன்னத ஓனர் காதுகொடுத்தே கேக்கல.

கனிமொழி மேடத்தேட மனசு புண்படும்படி பேசிட்டாங்கன்னு சொன்னப்ப முதல்ல ஆமா தப்புதான்னு சொன்னவரு இரண்டாவது உள்னோட பாப்புலாரிட்டிக்காக ஒவ்வொருத்தரையும் கூட்டிக்கிட்டு வர்ற. அதுக்கு நாங்க ஒன்னும் பண்ண முடியாதுன்னு சொன்னாரு.

கனிமொழி மேடம் வர்றதா நான் ஏற்கெனவே மேனேஜரிடம் சொல்லிவிட்டேன். ஆனா, மேனேஜரும் கனிமொழி மேடம் வர்றது தெரியாதுன்னு சொல்லிட்டாங்க. நான் திரும்பத் திருப்ப சொல்லியும் அவரு சொல்லவே இல்லன்னு சொல்லிட்டாரு. உடனே அப்பா சொன்னாரு, பாப்பா மேனேஜரிடம் சொன்னப்ப நானும்தான் இருந்தேன் நான் என்ன பைத்தியக்காரனான்னு கேட்டாங்க. அதுக்க ஓனர், உடனே உங்க பிள்ளைய கூட்டிட்டு போய்க்கோன்னு சொன்னாரு. சரி நான் இறங்கிக்கிறேன்னு சொல்லிட்டு வந்துட்டேன்”

MP Kanimozhi

இதுதொடர்பாக விளக்கமளித்துள்ள பேருந்தின் உரிமையாளர், தாங்கள் பணி நீக்கம் செய்யவில்லை என்றும் அவராகவே வேலை செய்ய விருப்பமில்லை என்று கூறி சென்றுவிட்டதாக தெரிவித்தார்.