தமிழ்நாடு

கோவை: மீண்டும் குடியிருப்பு பகுதிகளில் உலாவரும் காட்டு யானை 'பாகுபலி'

கோவை: மீண்டும் குடியிருப்பு பகுதிகளில் உலாவரும் காட்டு யானை 'பாகுபலி'

kaleelrahman

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் பகுதியில் மீண்டும் உலாவரும் 'பாகுபலி' யானையால் குடியிருப்பு வாசிகள் அச்சமடைந்துள்ளனர்.

கடந்த ஒராண்டுக்கு பிறகு வனத்தில் இருந்து வெளியேறிய பாகுபலி யானை, கடந்த சில நாட்களாக மேட்டுப்பாளையம் சுற்றுவட்டாரத்தில் சுற்றித்திரிகிறது. தற்போது தாசம்பாளையம் என்ற இடத்தில் முகாமிட்டுள்ள அந்த யானை, இருள் சூழ்ந்ததும் குடியிருப்புகளை சுற்றிசுற்றி வருகிறது. இதனால் வீட்டை விட்டு வெளியேற முடியாமல் மக்கள் அச்சத்தில் உள்ளனர்.

மேலும் விளைநிலங்களில் புகுந்து பயிர்களை சேதப்படுத்தி வருவதாகவும் அப்பகுதி விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர். நீலகிரி மாவட்டம் தொரப்பள்ளி பகுதியில் சாலையோரம் சுற்றித்திரியும் ஒற்றை யானையை வனத்துறையினர் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

முதுமலை வனப்பகுதிக்குச் செல்லும் சாலையில், கடந்த சில நாட்களாக ஒற்றை யானை அலைந்து திரிகிறது. இதனால் அப்பகுதி வழியாக செல்லும் வாகனங்கள் அச்சத்துடனே கடந்து செல்கின்றன. யானையை வனப்பகுதிக்குள் விரட்டும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.