கோவையில் இருந்து சென்னையை நோக்கி 5 நாட்களாக கை குழந்தையுடன் நடந்துவந்த தம்பதியினரை, தனது சொந்த காரை கொடுத்து சென்னைக்கு அரசு கால்நடை மருத்துவர் அனுப்பிவைத்தார்.
கோயம்புத்தூர் மதுக்கரை பகுதியைச் சேர்ந்த நவீன் ரம்யா தம்பதியினர் தங்களது குடும்ப வறுமை காரணமாக சென்னையில் ஹாலோ பிளாக் கல் தயாரிக்கும் நிறுவனத்தில் வேலைக்கு செல்ல தனது 1 வயது குழந்தையுடன் 5 நாட்களாக நடந்தே சென்னையை நோக்கி சென்றுள்ளனர். இந்நிலையில், இவர்கள் வேலூர் வழியாக நடந்து செல்வதை பார்த்த வேலூர் கால்நடை அரசு மருத்துவமனை மருத்துவர் ரவிசங்கர், அவர்களிடம் பேசி பிரச்னையை கேட்டறிந்து தம்பதிகளுக்கு உதவும் வகையில் தனது தொண்டு நிறுவனத்தின் காரில் அவர்களை அழைத்துச் சென்று சென்னையில் விட்டுள்ளார்.
5 நாட்களாக கை குழந்தையுடன் நடந்துவர காரணமாக, அந்த தம்பதியினர் கூறுகையில், பெற்றோர் வயதானவர்கள், தாய்க்கு உடல்நிலை சரியில்லாததால் 30 ஆயிரம் கடன் வாங்கி மருத்துவம் பார்த்தோம். கொரோனா பொது முடக்கத்தால் வேலை இல்லாததால் வீட்டு வாடகை கட்ட முடியவில்லை. உணவுக்கும் வழியில்லை. கடன் தொல்லை வேறு. இச்சூழலில் தான் சென்னையில் வேலையுடன் தங்க இடம் கொடுப்பதாக சொன்னார்கள். அதனால் தான் துணிந்து புறப்பட்டுவிட்டோம்" என்றார்.