Anne Carroll புதிய தலைமுறை
தமிழ்நாடு

கோவை: பூனைகளுக்காகவே வாழ்க்கை அர்ப்பணிப்பு; திருமணத்தை கூட உதறித் தள்ளிய பெண்... யார் இவர்?

அயர்லாந்து வம்சாவளியைச் சேர்ந்த பெண்மணி, பூனைகளுக்காகவே தனது வாழ்வை அர்ப்பணித்துள்ளார்... பூனைகளை வளர்த்து பராமரிப்பதற்காக, திருமண வாழ்வையும் உதறித் தள்ளியுள்ளார்

PT WEB

அயர்லாந்து வம்சாவளியைச் சேர்ந்த பெண்மணி, பூனைகளுக்காகவே தனது வாழ்வை அர்ப்பணித்துள்ளார்...
பூனைகளை வளர்த்து பராமரிப்பதற்காக, திருமண
வாழ்வையும் உதறித் தள்ளியுள்ளார் இந்த விசித்திரப் பெண்மணி...

கோவையில் சுங்கம் பைபாஸ் சாலையில் உள்ள இந்த வீட்டுக்குள்
நுழைந்தால், கிட்டத்தட்ட உலகில் உள்ள எல்லா பூனை வகைகளையும் நேரில் பார்த்திடலாம்... இங்குள்ள 80க்கும்
அதிகமான, விதவிதமான பூனைகளை, பிள்ளைகளைப் போல வளர்க்கிறார் ஆன் கேரல்... ( Anne Carroll) அயர்லாந்து
வம்சாவளியை சேர்ந்த இவர், கோவையில்தான் பள்ளி - கல்லூரிப்
படிப்புகளை முடித்துள்ளார்... சிறுவயதில் இருந்தே பூனைகள் மீது அதீத அன்பு கொண்ட ஆன் கேரல், பூனைகள் இல்லாத வாழ்வு தனக்கில்லை என்ற அளவுக்கு ஆகியுள்ளார்...

இவரை மணம் முடிக்க இருந்தவர், பூனைகளுடன் இணக்கம் கூடாது என கூறியதால், வாழ்க்கைத் துணையே வேண்டாம் என
மணவாழ்வை மறுத்துள்ளார் ஆன் கேரல்... பல்வேறு தருணங்களில், ஸ்காட்லாந்து, அயர்லாந்து, துபாய் போன்ற நாடுகளில் வசித்த ஆன் கேரல், மீண்டும் கோவைக்கே வந்துள்ளார்..

இது குறித்து இவர் பேசிய பொழுது "பூனைகளைப் பராமரித்து பாதுகாப்பதில் எனக்கு மிகவும்
மகிழ்ச்சி பூனைகளைப் பராமரிப்பதில் எனக்கு
உற்சாகம் கிடைக்கிறது. பூனைகளை குழந்தைகளைப் போல
பார்த்துப் பார்த்து பராமரிக்க வேண்டும்.
பூனைகள் தங்களை ராணி போல
எண்ணிக் கொள்ளும்.
" என்கிறார்.

சர்வதேச சந்தையில் பல லட்சம் ரூபாய்க்கு விற்பனையாகும் ரஷ்யா, ஈரான், பிரிட்டன் நாடுகளின் உயர் ரக பூனைகளோடு, இந்தியப் பூனைகளையும் வளர்க்கிறார் ஆன்.  தாயின் குரலுக்கு தாவி வரும் குழந்தையைப் போல, இவரை சூழ்ந்து கொள்கின்றன பூனைகள். மனிதர்களுடன் பேசுவதைப் போலவே பூனைகளுடன் பேசுகிறார் ஆன் கேரல்... அவருக்கு பூனைகளும் தங்கள் அன்பினால் எதிர்வினையாற்றுகின்றன... பூனைகளுடன்தான் வாழ்க்கை என ஆகிவிட்டதால், அவற்றின் மூலமே வருவாயை ஈட்டி வருகிறார் ஆன் கேரல்... சர்வதேச பூனைகள் BREEDER ஆகவும் திகழ்கிறார். இதுதொடர்பாக, பல்வேறு நாடுகளைச் சேர்ந்தவர்களும் இவரிடம் வர்த்தகம் செய்கின்றனர்...

பூனைகள் குறித்து அறிந்துள்ள நுணுக்கங்களின் காரணமாக, சர்வதேச அரங்கில் பூனைகள் தொடர்பான நிகழ்ச்சிகளுக்கு நடுவராகவும் இருக்கிறார் ஆன் கேரல்... 68 வயதான ஆன் கேரல், பூனைகள் வளர்ப்பு, பூனைகளுடனான மனித வாழ்க்கை குறித்தும் விழிப்புணர்வுகளை ஏற்படுத்தி வருகிறார்... பூனைகளை ராணி போல பார்த்துக் கொள்ள வேண்டுமென கூறும் இவர், வாழ்வின் இறுதி நாள் வரையும் பூனைகளுடனே
இருக்க வேண்டுமென கூறி நெகிழ்கிறார்...