தமிழ்நாடு

மேற்குத்தொடர்ச்சி மலைக்காடுகளை வந்தடைந்த பட்டாம்‌பூச்சிகள்

மேற்குத்தொடர்ச்சி மலைக்காடுகளை வந்தடைந்த பட்டாம்‌பூச்சிகள்

webteam

பல்லாயிரக்கணக்கில் குவியும் பட்டாம்பூச்சிகளின் வலசையால் கல்லார் பகுதியே வண்ணமயமாக காட்சியளிக்கிறது. 

யானைகளைப்போல ஆண்டுக்கு இருமுறை வலசை செல்லும் தன்மையுடைய பட்டாம்பூச்சிகள், தென்மேற்கு பருவமழையின் துவக்கத்தில் மேற்குத்தொடர்ச்சி மலைக்காடுகளில் புறப்பட்டு, கிழக்கு தொடர்ச்சி மலைக்காடுகளை சென்றடையும். இன விருத்திக்குப் பின்னர் அங்கிருந்து வடகிழக்கு பருவமழையின் இறுதிக் காலத்தில் மீண்டும் புதிய பூச்சிகளின் கூட்டமாக கிழக்குதொடர்ச்சி மலைக்காட்டில் இருந்து மேற்குத் தொடர்ச்சி மலைக்காடுகளை வந்தடையும். இதையொட்டி, பலவிதமாக பட்டாம்பூச்சிகள் கோவை மாவட்டம் கல்லார் பகுதியில் சிறகடிக்கின்றன.

தமிழ்மறவன் பட்டாம்பூச்சி உள்ளிட்ட ஏராளமான அரிய வகை பட்டாம்பூச்சிகள் காணக்கிடைப்பதாக கூறும் பட்டாம்பூச்சி ஆர்வலர்கள், இவற்றை ஆய்வு செய்து ஆவணப்படுத்த துறைசார்ந்த வல்லுனர்கள் "பட்டர்பிளை ஹாட் ஸ்பாட்" என்றழைக்கபடும் கல்லார் பகுதிக்கு வர வேண்டும் என கோரிக்கை விடுக்கின்றனர்.