தமிழ்நாடு

பத்து ரூபாய் நாணயங்களை வாங்க மறுத்த வங்கி: வாடிக்கையாளர் போராட்டம்

பத்து ரூபாய் நாணயங்களை வாங்க மறுத்த வங்கி: வாடிக்கையாளர் போராட்டம்

webteam

கோவை ஒப்பனக்கார வீதியில் செயல்பட்டு வரும் கரூர் வைசியா வங்கியில், பத்து ரூபாய் நாண‌யங்களைப் பெற அதிகாரிகள் மறுப்பதாக கூறி வாடிக்கையாளர் ஒருவர் போராட்டத்தில் ஈடுபட்டார்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர். வங்கி அதிகாரிகளிடம் விசாரணை நடத்தினர். இரண்டாயிரம் ரூபாயை, பத்து ரூபாய் நாணயங்களாக வங்கியில் செலுத்தக் கொண்டு வந்ததாகவும், ஆனால், அதனை வங்கி அதிகாரிகள் ஏற்க மறுத்ததாகவும் ராஜன் என்ற வாடிக்கையாளர் தெரிவித்தார். மேலும், வங்கி அதிகாரிகள் தம்மை தகாத வார்த்தைகளால் பேசியதாகவும் அவர் புகார் கூறினார். பத்து ரூபாய் நாணயங்கள் செல்லும் என ரிசர்வ் வங்கி அறிவித்த பின்னரும், தனியார் வங்கிகள் அவற்றை வாங்க மறுப்பதாக வாடிக்கையாளர்கள் தெரிவிக்கின்றனர். பத்து ரூபாய் நாணயங்களை வாங்க மறுக்கக் கூடாது என அண்மையில் மாவட்ட ஆட்சியர் அறிக்கை விட்டிருப்பதையும் வாடிக்கையாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.