ராமநாதபுரத்தில் கடற்சீற்றத்தால் மண்ணரிப்பு ஏற்பட்டு தென்னை மரங்கள் சாலையில் விழுந்தன.
கடந்த சில நாட்களாகவே பாக்ஜலசந்தி மற்றும் மன்னார்வளைகுடா கடற்பகுதியில் வழக்கத்திற்கு மாறாக காற்றின் வேகம் அதிகரித்தது. இதனால் ராட்சத அலைகள் உருவாயின. மண்டபம் அருகேயுள்ள சீனியப்பா தர்ஹா பகுதியில், கடல்நீர் ஊருக்குள் புகுந்தது. இதில், தென்னை மரங்கள் வேரோடு சாய்ந்தன. கடல் அரிப்பால் சாலையும் சேதமடைந்துள்ளது. சுனாமிக்கு பிறகும் இந்தநிலை தொடர்வதால், தடுப்புச்சுவரும், படகுகளை பாதுகாப்பாக நிறுத்திவைக்கக் தூண்டில் வளைவும் கட்டித்தருமாறு பாதிக்கப்பட்ட மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இது குறித்து பல முறை மாவட்ட நிர்வாகத்திடம் மனு அளித்தும், அவர்கள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் குற்றஞ்சாட்டியுள்ளனர்.