தமிழ்நாடு

கோயம்பேடு பேருந்துநிலையத்திற்கு எம்.ஜி.ஆர். பெயர்

கோயம்பேடு பேருந்துநிலையத்திற்கு எம்.ஜி.ஆர். பெயர்

rajakannan

சென்னை கோயம்பேடு பேருந்துநிலையத்துக்கு, புரட்சித் தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர். பேருந்து நிலையம் எனப் பெயர் மாற்றப்பட்டுள்ளது.‌ 

சென்னையில் அண்மையில் நடைபெற்ற எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவின் போது, கோயம்பேடு பேருந்து நிலையத்தின் பெயர் மாற்றப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்திருந்தார். அறிவிப்பு வெளியாகி 8 நாட்களில் பேருந்துநிலையத்தின் பெயர் புரட்சித் தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர். பேருந்து நிலையம் என மாற்றப்பட்டுள்ளது.‌‌ 

முதற்கட்டமாக நடைமேடை நுழைவாயிலில் புதியபெயருடன் அறிவிப்பு பலகைகள் வைக்கப்பட்டுள்ளன. கருணாநிதி முதலமைச்சராக இருந்தபோது அடிக்கல் நாட்டப்பட்ட இந்தப் பேருந்து நிலையத்தை 2002ஆம் ஆண்டு அப்போதைய முதலமைச்சர்  ஜெயலலிதா திறந்து வைத்தார்.