செய்தியாளர்: ராஜ்குமார்
சென்னை தலைமைச் செயலகத்தில் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர்... "நாள்தோறும் நல்ல திட்டங்களை அறிவித்து வரும் முதலமைச்சர், சுதந்திர தின உரையில் சிறப்பான புதிய அறிவிப்புகளையும் வெளியிட்டுள்ளார். குறைந்த விலையில் மருந்துகளை விற்பனை செய்வதை உறுதிப்படுத்தும் வகையில் முதற்கட்டமாக ஆயிரம் மருந்தகங்கள் அமைக்கப்படும் என்ற அறிவிப்பை முதலமைச்சர் வெளியிட்டுள்ளார்.
ஓய்வுபெற்ற முன்னாள் படை வீரர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதோடு, வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் முதல்வரின் காக்கும் கரங்கள் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் ஒரு கோடி வரை வங்கிகளில் கடன் பெற முடியும். ஆளுநர் பதவிக்கு உரிய மரியாதையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எப்போதும் வழங்கி வருகிறார்.
தேநீர் விருந்தில் பங்கேற்க வேண்டும் என அமைச்சர்கள் மற்றும் முதலமைச்சருக்கு ஆளுநர் அழைப்பிதழ் அனுப்பி இருக்கிறார். எனவே, முதலமைச்சர் உட்பட அமைச்சர்கள் ஆளுநர் அளிக்கும் தேநீர் விருந்தில் பங்கேற்பார்கள்" என்று தங்கம் தென்னரசு தெரிவித்தார்.