முதலமைச்சர் ஸ்டாலின் முகநூல்
தமிழ்நாடு

“கைது செய்யப்பட்ட 140 மீனவர்களை உடனடியாக விடுவிக்க வேண்டும்” - முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம்!

கைது செய்யப்பட்ட 140 மீனவர்களை உடனடியாக விடுவிக்க நடவடிக்கை வேண்டும் என வெளியுறவுத்துறை அமைச்சருக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம்.

PT WEB

இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ள நாகை மீனவர்கள் 12 பேர் உட்பட 140 பேரை உடனடியாக விடுவிக்க உரிய நடவடிக்கை மேற்கொள்ள வலியுறுத்தி வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

இந்திய மீனவர்கள் இலங்கை அதிகாரிகளால் தொடர்ந்து கைது செய்யப்பட்டு வரும் சம்பவங்களை முதலமைச்சர் அந்த கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளார். இத்தகைய கைது நடவடிக்கைகள், இந்தியா - இலங்கை இடையிலேயான ஆக்கபூர்வமான தூதரக முயற்சிகளுக்கு ஊறு விளைவிக்கும் செயல் என கூறியுள்ளார்.

தமிழ்நாட்டு மீனவர்கள் கைது செய்யப்படுவது அவர்களது வாழ்வாதாரம் மற்றும் பாதுகாப்பிற்கு கடுமையான அச்சுறுத்தலைத் தொடர்ந்து ஏற்படுத்தி வருவதாகவும் முதலமைச்சர் குறிப்பிட்டுள்ளார். இலங்கை கடற்படையால் இதுவரை 140 மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், 200 மீன்பிடிப் படகுகள் இலங்கை அரசு வசம் இருப்பதாகவும் கூறியுள்ளார்.

இந்த பிரச்னைக்கு முன்னுரிமை அளித்து, இலங்கை அரசால் கைது செய்யப்பட்டுள்ள அனைத்து மீனவர்கள், அவர்களது படகுகளை உடனடியாக விடுவித்திட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் முதலமைச்சர் ஸ்டாலின் கேட்டுக் கொண்டுள்ளார்.