தமிழ்நாடு

“தளர்வுகள் அளித்தால் மக்கள் கூடுகின்றனர்; அலட்சியப்படுத்துகிறார்கள்” - முதல்வர் ஸ்டாலின்

“தளர்வுகள் அளித்தால் மக்கள் கூடுகின்றனர்; அலட்சியப்படுத்துகிறார்கள்” - முதல்வர் ஸ்டாலின்

Sinekadhara

சென்னை தனியார் மருத்துவமனையில் ரோபாடிக் கல்லீரல் அறுவைசிகிச்சை நிகழ்வைத் தொடங்கி வைத்து பேசினார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.

அப்போது, ‘’கொரோனா பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது; தளர்வுகளை அளித்தால் உடனே மக்கள் கூடிவிடுகின்றனர். அரசு விழிப்புணர்வு ஏற்படுத்தினாலும் மக்கள் அலட்சியப்படுத்துகின்றனர். இதுபோன்ற நேரத்தில் தனியார் மருத்துவமனைகள் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்’’ என்று கூறினார்.

ஏற்கெனவே அண்டை மாநிலமான கேரளத்தில் தொற்று எண்ணிக்கை அதிகரித்து வருவதால் அங்கு ஊரடங்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் தமிழகத்திலும் சில இடங்களில் தொற்று எண்ணிக்கை அதிகரித்து வருவதால் மூன்றாம் அலையைத் தடுக்க ஊரடங்கு தளர்வுகளில் மீண்டும் கட்டுப்பாடுகள் விதிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.