வீடியோ கால் மூலம் குறைகளை கேட்டறிந்த முதல்வர் ஸ்டாலின் pt desk
தமிழ்நாடு

திருவள்ளூர்: முகாமில் தங்கியுள்ளோரிடம் வீடியோ-கால் மூலம் குறைகளை கேட்டறிந்த முதல்வர் ஸ்டாலின்!

கும்மிடிப்பூண்டி அருகே நிவாரண முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ள மக்களிடம் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வீடியோ காலில் பேசி அடிப்படை வசதிகள் குறித்து கேட்டறிந்தார்.

PT WEB

செய்தியாளர்: எழில்

வடகிழக்கு பருவமழை துவங்கிய முதல் நாளான நேற்றைய தினமே, காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவானது. இதன் காரணமாக திருவள்ளூர் மாவட்டத்திற்கு 2 நாட்கள் அதிகனமழைக்கான ரெட் அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளது.

கும்மிடிப்பூண்டி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பரவலாக கனமழை பெய்து வருகிறது. இதையடுத்து மெதிப்பாளையம் கிராமத்தில் தாழ்வான பகுதியில் வசிக்கும் மீனவ மக்கள் அங்குள்ள நிவாரண முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

வீடியோ கால் மூலம் குறைகளை கேட்டறிந்த முதல்வர் ஸ்டாலின்

இந்நிலையில், சென்னை எழிலகத்தில் அமைந்துள்ள மாநில அவசரகால செயல்பாட்டு மையத்தில் நேற்று ஆய்வு மேற்கொண்ட முதல்வர் ஸ்டாலின் மாவட்ட ஆட்சியர்களுடன் கலந்துரையாடினார்.

இதைத் தொடர்ந்து மெதிப்பாளையம் நிவாரண முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ள பெண் ஒருவரிடம் வீடியோ-கால் மூலம் கலந்துரையாடிய முதல்வர், அங்கு வழங்கப்படும் உணவு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் குறித்து கேட்டறிந்தார். அப்போது அமைச்சர் நாசர் உடனிருந்தார்.