ஜபில் நிறுவனத்துடன் தமிழ்நாடு அரசு புரிந்துணர்வு ஒப்பந்தம் புதிய தலைமுறை
தமிழ்நாடு

திருச்சியில் 5,000 பேருக்கு வேலை வாய்ப்பு; ஜபில் நிறுவனத்துடன் தமிழக அரசு புரிந்துணர்வு ஒப்பந்தம்!

திருச்சியில் 5 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் வகையில், ஜபில் மின்னணு பொருள் உற்பத்தி நிறுவனத்துடன் தமிழ்நாடு அரசு புரிந்துணர்வு ஒப்பந்தத்தை ஏற்படுத்தியுள்ளது.

PT WEB

தமிழ்நாட்டுக்கான முதலீடுகளை பெறுவதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அமெரிக்காவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளார். அங்கு பல்வேறு நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன. இந்நிலையில், மின்னணு உற்பத்தி பொருட்களை வழங்கும் ஜபில் நிறுவனத்துடனான புரிந்துணர்வு ஒப்பந்தம், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் கையெழுத்தாகி உள்ளன.

ஜபில் நிறுவனத்துடன் தமிழ்நாடு அரசு புரிந்துணர்வு ஒப்பந்தம்

ஆப்பிள், ஹெச்.பி., சிஸ்கோ நிறுவனங்களுக்கு மின்னணு உற்பத்தி பொருட்களை வழங்கும் ஜபில் நிறுவனத்தின் தொழிற்சாலை, திருச்சியில் 2 ஆயிரம் கோடி ரூபாய் முதலீட்டில் அமைய உள்ளது.

இதன்மூலம் 5 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் எனவும், மின்னணு பொருட்களின் முனையமாக திருச்சி மாறும் என்றும் தமிழக அரசு தெரிவித்துள்ளது. மேலும் காஞ்சிபுரத்தில், ராக்வெல் ஆட்டோமேஷன் நிறுவனம் 666 கோடி ரூபாய் முதலீட்டில் உற்பத்தியை விரிவுப்படுத்த உள்ளதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

ஜபில் நிறுவனத்துடன் தமிழ்நாடு அரசு புரிந்துணர்வு ஒப்பந்தம்

இளைஞர்கள் மற்றும் ஸ்டார்ட் அப் நிறுவனங்களை ஊக்குவிப்பதற்காக ஆட்டோ டெஸ்க் நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டுள்ளதாகவும், இதன்மூலம் ஒட்டுமொத்த தொழில்துறை சுற்றுச்சூழல் அமைப்பு வலுப்படுத்தப்படும் என்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.