முதல்வர் மு.க.ஸ்டாலின் புதிய தலைமுறை
தமிழ்நாடு

காவிரி விவகாரம் : அனைத்துக்கட்சி கூட்டத்தில் முதல்வர் எடுத்த அதிரடி முடிவு!

“இந்த வருடம் தென்மேற்கு பருவமழை சாதகமாக இருப்பினும், கர்நாடக அரசு வினாடிக்கு 8000 கன அடி நீர் மட்டுமே திறக்கமுடியும் என்று கூறுவதை ஏற்றுக்கொள்ள முடியாது.... ” - முதலமைச்சர்

Jayashree A

தமிழகத்துக்கு வினாடிக்கு 8000 கன அடி நீர் மட்டுமே திறக்க முடியும் என கர்நாடகா அரசு திட்டவட்டமாக கூறியதை அடுத்து, அதுகுறித்து தமிழக சட்டமன்றக் கட்சிகளின் அனைத்துக்கட்சி கூட்டத்தில் முதலமைச்சர் இன்று ஆலோசனை நடத்தினார். அமைச்சர் துரைமுருகன் தலைமையில் நடந்த இக்கூட்டத்தில் முதல்வர் முன்னிலை வகித்திருந்தார்.

முதல்வர் மு.க.ஸ்டாலின்

கூட்டத்தில் பேசிய முதல்வர், “காவிரி டெல்டா பகுதியில் உள்ள விவசாயிகளுக்கு தண்ணீர் கிடைக்க செய்வதற்கு எடுக்கப்பட வேண்டிய நடைமுறைகளை பற்றி பல ஆக்கபூர்வமான கருத்துக்களை இங்கே நீங்கள் தெரிவித்து இருக்கிறீர்கள். அதற்காக எனது நன்றியை நான் தெரிவித்துக் கொள்கிறேன்.

தமிழ்நாட்டிற்கு நீதிமன்ற தீர்ப்பு படி கிடைக்க வேண்டிய நீரினை சென்ற ஆண்டு கர்நாடக அரசு விடுவிக்காததால் டெல்டா மக்களுக்கு கடும் பாதிப்பு ஏற்பட்டது. பிறகு உச்ச நீதிமன்றத்தை நாடி நீரை பெற்றோம். இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை சாதகமாக இருக்கக்கூடிய சூழலிலும் கர்நாடக அரசு இவ்வாறு நடந்து கொள்வதை எவ்விதத்திலும் ஏற்றுக்கொள்ள முடியாது” என்றார்.

முதல்வரின் கருத்துகளை முழுமையாக தெரிந்து கொள்ள கீழிருக்கும் காணொளியை பார்க்கலாம்.