முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் pt web
தமிழ்நாடு

“திமுகவின் செல்வாக்கு சரிந்துவிட்டதா? இபிஎஸ் கனவு உலகத்தில் இருக்கிறாரா?” - முதல்வர் மு.க.ஸ்டாலின்

திமுகவின் செல்வாக்கு சரிந்து வருவதாக கூறும் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கனவு உலகத்தில் இருக்கிறாரா என தெரியவில்லை என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.

PT WEB

திமுகவின் செல்வாக்கு சரிந்து வருவதாக கூறும் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கனவு உலகத்தில் இருக்கிறாரா என தெரியவில்லை என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விமர்சித்துள்ளார். அதிமுக ஆட்சி காலத்தில் தமிழ்நாட்டின் மதிப்பு அடகு வைக்கப்பட்டிருந்ததாகவும் அவர் கூறியுள்ளார்.

நாமக்கல் பரமத்தி சாலையில் உள்ள செலம்ப கவுண்டர் பூங்காவில் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் வெண்கல சிலையை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் திறந்து வைத்தார். பின்னர் கருணாநிதியின் உருவப்படத்திற்கு மலர்தூவி அவர் மரியாதை செலுத்தினார்.

நாமக்கல்லில் கலைஞர் சிலை திறப்பு பொருத்தமானது: முதல்வர்

இதனையடுத்து, பொம்மைக்குட்டை மேடு பகுதியில் நடைபெற்ற நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில் உரையாற்றிய முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், 3 ஆண்டுகால ஆட்சியில் ஒவ்வொரு துறையிலும் கொண்டுவரப்பட்ட திட்டங்களின் நிலை குறித்து நேரடியாக சென்று கள ஆய்வு செய்ய இருப்பதாக தெரிவித்தார். அதிகளவு தொழிற்சாலைகள் தமிழ்நாட்டை நோக்கி வந்து கொண்டிருப்பதாக குறிப்பிட்ட முதல்வர், 5 ஆண்டுகளுக்கு பிறகு அனைத்து மாவட்டங்களும் வளர்ச்சிபெறும் என கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர், “திமுகவின் மதிப்பு சரிந்து வருவதாக கூறும் எதிர்க்கட்சித் தலைவர் கனவு உலகத்தில் இருக்கிறாரா என தெரியவில்லை. தொடர்ந்து பேசிய முதலமைச்சர், தமிழ்நாட்டில் மதிப்புமிக்க ஆட்சியை திமுக வழங்கி வருகிறது. திமுக மீதான எடப்பாடி பழனிசாமியின் குற்றச்சாட்டுகளை மக்கள் பார்த்து நகைச்சுவையாக கடந்து செல்வார்கள்” என தெரிவித்தார்.

முன்னதாக, 810 கோடி ரூபாய் மதிப்பிலான முடிவுற்ற மற்றும் புதிய திட்டங்களையும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.