cm stalin pt desk
தமிழ்நாடு

“ரூ 4,000 கோடிக்கு மேற்கொள்ளப்பட்ட பணிகளால்தான் மழை பாதிப்பு குறைந்துள்ளது” - முதல்வர் ஸ்டாலின்

"கடந்த 2015-ல் ஏற்பட்டது செயற்கை வெள்ளம். ஆனால், இம்முறை சென்னை எதிர்கொண்டது இயற்கை வெள்ளம்" என்று முதல்வர் முக.ஸ்டாலின் பேட்டியளித்தார்.

webteam

தமிழக முதல்வர் முக.ஸ்டாலின் ரிப்பன் மாளிகையில் உள்ள கட்டுப்பாட்டு அறையில் ஆய்வு மேற்கொண்டார். அதன் பின் செய்தியாளர்களை சந்தித்த அவர் பேசிய போது...

flood

“சென்னையில் மீட்புப் பணிகள் விரைவாக நடைபெற்று வருவதால் இயல்பு வாழ்க்கை வெகு விரைவில் திரும்பும். கடந்த 2015-ல் ஏற்பட்டது செயற்கை வெள்ளம். ஆனால், இம்முறை சென்னை எதிர்கொண்டது இயற்கை வெள்ளம். மழை நிற்பதற்கு முன்பே வெளி மாவட்ட பணியாளர்கள் வரவழைக்கப்பட்டதால் மீட்புப் பணிகள் விரைவாக தொடங்கியுள்ளன.

கடந்த 2015-ல் பெய்த மழையில் 119 பேர் உயிரிழந்த நிலையில், இம்முறை அதிக மழை பெய்தும் 7 பேர் மட்டுமே உயிரிழந்துள்ளனர்.

மழையால் பாதித்த 9 மாவட்டங்களில் 61 ஆயிரம் பேர் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு 11 லட்சம் உணவு பாக்கெட் மற்றும் 1 லட்சம் பால் பாக்கெட்டுகள் வழங்கப்பட்டுள்ளன.

chennai rain

புயல், மழை பாதிப்புக்காக மத்திய அரசிடம் 5 ஆயிரம் கோடி நிவாரண உதவி கேட்கப்படும். மத்திய அரசு வழங்கும் நிதியை பொறுத்து நிவாரண உதவிகள் வழங்கப்படும். சென்னையில் கடந்த காலங்களை விட இம்முறை பாதிப்பு குறைவு. அரசின் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளால் மழையால் பாதிப்பின் தாக்கம் குறைந்துள்ளது. 4 ஆயிரம் கோடிக்கு சென்னையில் மேற்கொள்ளப்பட்ட பணிகளால்தான் மழை பாதிப்பு குறைந்துள்ளது” என்றார்.

முன்னதாக முதல்வர் மக்கள் தங்கவைக்கப்பட்டுள்ள முகாம்களில் நேரில் ஆய்வுகொண்டதும் குறிப்பிடத்தக்கது.