முதல்வர் ஸ்டாலின் பதில்  pt
தமிழ்நாடு

"மதுரை எய்ம்ஸ் மாதிரி இருக்காது; விரைவில் பணிகள் முடியும்" - வானதி சீனிவாசன்-க்கு முதல்வர் பதில்!

தமிழ்நாடு சட்டப்பேரவை, 'கோவையில் நூலகம் விரைவாக அமைக்க வேண்டும். அதற்கு எவ்வளவு நிதி ஒதுக்கி இருக்கிறீர்கள் . எந்த காலத்தின் அந்த பணிகள் எல்லாம் முடிவு பெறும் ', என்று வானதி சீனிவாசன் கேள்வி எழுப்பியதற்கு, பதில் அளித்தார் முதலமைச்சர் ஸ்டாலின்.

ஜெனிட்டா ரோஸ்லின்

இது குறித்து தமிழக சட்டப்பேரவையில் தனது உரையின் போது பதிலளித்த முதலமைச்சர் ஸ்டாலின், “கோவையில் நூலகம் உடனடியாக செயலாக்கத்திற்கு வரும். ஏனென்றால், இந்த ஆட்சி சொன்னதை செய்யும். சொல்வதைதான் செய்யும். எப்படி ,மதுரையில் உலகத்தரம் வாய்ந்த கலைஞர் நூலகம் குறிப்பிட்ட காலத்திற்குள் கட்டப்பட்டு திறந்து வைக்கப்பட்டிருக்கிறதோ, அதேபோல் சென்னையில் கலைஞர் பல்நோக்கி சிறப்பு மருத்துவமனை, அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு ஏறுதழுவுதல் அரங்கம் அமையப்பெற்றுள்ளதோ, இன்னும் சற்றுகாலத்தில் கலைஞர் நினைவிடம் அமைய இருக்கிறதோ அதுப்போல நிச்சயம் இந்த ஆட்சியில் சொன்னது நடக்கும்.

ஒன்றுமட்டும் உறுதியாக சொல்லிக்கொள்ள விரும்புகிறேன். மதுரையில் ஏம்ஸ் மருத்துவமனை அமையும் என்று அறிவித்ததுப்போல இல்லாமல், குறிப்பிட்ட காலத்திற்குள் கோவையில் நூலகம் கட்டி முடிக்கப்படும். அதற்கான தேதியையும் இப்போதே அறிவித்து விடுகிறேன். ஜனவரி மாதம் 2026 ஆம் ஆண்டு நூலகம் திறக்கப்படும். திறக்கப்படும் நிகழ்ச்சிக்கு முறையாக அழைப்பு வரும். நீங்களும் நிச்சயம் வர வேண்டும்.“ என்று தெரிவித்துள்ளார்.